Women's Day 2024 | கல்பனா சாவ்லா முதல் ஹெலன் ஷர்மன் வரை... விண்வெளியில் கால்பதித்த 5 சாதனை மகளிர்!

மார்ச் 8-ம் தேதி, சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களின் சாதனைகளை சொல்லும் விதமாக, அடுத்து வரும் 7 நாட்களும் ஒவ்வொரு துறையிலும் சாதித்த பெண்களை பற்றி காண்போம். இன்று விண்வெளியில் சாதனை புரிந்த பெண்களில் சிலர்..
விண்வெளிதுறையில் சாதித்த பெண்கள்
விண்வெளிதுறையில் சாதித்த பெண்கள்freepik

விண்வெளி ஆராய்ச்சி தொடங்கியதிலிருந்து மார்ச் 2023 வரை சுமார் 72 பெண்கள் விண்வெளியில் பறந்திருப்பதாக நாசாவின் ஆய்வறிக்கை கூறுகிறது. இதில் 44 பேர் பெண்கள்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயணக் குழு உறுப்பினர்களாக இருந்தவர்கள், விண்வெளி விமானத்தில் பணியாற்றியவர்கள், மைய இயக்குநர்கள், மேலாளர்கள், விமான இயக்குநர்கள் என இந்த 44 பெண்களும் பல்வேறு பணிகளை செய்துவந்தவர்கள். அவர்களில் முக்கியமான ஐந்து பேர் குறித்து, இன்று அறிவோம்!

1. வாலண்டினா விளாடிமிரோவ்னா தெரேஷ்கோவா :

வாலண்டினா விளாடிமிரோவ்னா தெரேஷ்கோவா
வாலண்டினா விளாடிமிரோவ்னா தெரேஷ்கோவா

இவர் 1937 மார்ச் 6ம் தேதி பிறந்தவர். ரஷ்ய பொறியாளராகவும், முன்னாள் சோவியத் விண்வெளி வீரராகவும் பணியாற்றியவர். 1963 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி வோஸ்டாக் 6-ல் தனியொரு பெண்ணாக பயணத்தை மேற்கொண்ட அவர் விண்வெளியில் பூமியை 48 முறை சுற்றினார்.

வோஸ்டாக் 6
வோஸ்டாக் 6

கிட்டத்தட்ட மூன்று நாட்கள் விண்வெளியில் இருந்தார். தனியாக பூமியைச் சுற்றி வந்த முதல் பெண் என்ற வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பெற்றவர்.

2. ஸ்வெட்லானா சாவிட்ஸ்காயா

இவர் 1948 ஆகஸ்ட் 8-ல் பிறந்தவர். ரஷ்ய முன்னாள் விமானியாகவும் சோவியத் விண்வெளி வீராங்கனையாகவும் பணியாற்றியவர். லியோனிட் போபோவ் மற்றும் அலெக்சாண்டர் செரிப்ரோவ் ஆகியோருடன் 1982-ல் சோயுஸ் டி-7 விண்கலனிலும்; 1984-ல் விளாடிமிர் டிஜானிபெகோவ் மற்றும் இகோர் வோல்க் ஆகியோருடன் சோயுஸ் டி-12 விண்கலனிலும் விண்வெளிக்கு சென்றுள்ளார். இரண்டு முறை விண்வெளிக்கு பறந்த முதல் பெண்மணி.

3. கேத்ரின் டி. சல்லிவன்

அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான இவர் 1951-ம் வருடம் அக்டோபர் 3ம் தேதி பிறந்தவர். அமெரிக்க புவியியலாளராகவும், கடல்சார் ஆய்வாளராகவும், அமெரிக்க கடற்படை அதிகாரியாகவும் நாசா விண்வெளி வீராங்கனையாகவும் இருந்தவர். நாசா விண்கலங்களில் ஒரு குழுவின் உறுப்பினராகவும் இருந்தவர்.

நாசாவின் 35 விண்வெளி வீரர்களில், ஆறு பெண்களில் ஒருவராக சல்லிவன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெண்களை உள்ளடக்கிய முதல் குழுவான NASA Astronaut Group 8-ன் வேட்பாளராக இருந்தவர். யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏர்ஃபோர்ஸ் பிரஷர் சூட் அணிவதற்கான சான்றிதழைப் பெற்ற முதல் பெண்மணி இவர்.

விண்வெளிதுறையில் சாதித்த பெண்கள்
அறிவியல் ஆச்சர்யங்கள் | நாம் கண்களால் காணும் கிரகங்களின் நிறங்கள் உண்மைதானா?

4. ஹெலன் ஷர்மன்

இவர் 1963 மே மாதம் 30ம் தேதி பிறந்தவர். இங்கிலாந்தை சேர்ந்தவர். பிரிட்டிஷ் வேதியயலாளராகவும் விண்வெளி வீராங்கனையாகவும் பணியாற்றியவர்.1991 மே மாதம் Soyuz TM-12 என்ற விண்கலத்தில் இரண்டு சோவியத் விண்வெளி வீரர்களான கமாண்டர் அனடோலி ஆர்ட்செபார்ஸ்கி மற்றும் விமானப் பொறியாளர் செர்ஜி கிரிகலியோவுடன் ஒரு ஆராய்ச்சி விண்வெளி வீரராக விண்வெளிக்குச் சென்றார்.

ஹெலன் ஷர்மன்
ஹெலன் ஷர்மன்

Soyuz TM-12 மே 20 அன்று மிர் விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டது. இந்த பணி கிட்டத்தட்ட எட்டு நாட்கள் நீடித்தது, அந்த நேரத்தில் ஷர்மன் மருத்துவ மற்றும் விவசாய சோதனைகளை நடத்தினார். மேலும் பிரிட்டிஷ் பள்ளி மாணவர்களை வானொலியில் தொடர்பு கொள்ளவும் செய்தார். ஷர்மன், மே 26 அன்று சோயுஸ் டிஎம்-11 கப்பலில் பூமிக்குத் திரும்பினார்.

5. கல்பனா சாவ்லா 

கல்பனா சாவ்லா
கல்பனா சாவ்லா

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா, 1962 மார்ச் 17ம் தேதி பிறந்தவர். 1997ல் ஸ்பேஸ் ஷட்டில் கொலம்பியாவில் ஒரு பணி நிபுணராகவும் ரோபோடிக் ஆர்ம் ஆபரேட்டராகவும் பணியாற்றியவர். இவரின் முதல் விண்வெளி பயணமாக STS-87 என்ற விண்கல பயணம் அமைந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com