அறிவியல் ஆச்சர்யங்கள் | நாம் கண்களால் காணும் கிரகங்களின் நிறங்கள் உண்மைதானா?

நாம் பார்க்கும் எல்லா நிறங்களும் உண்மையிலேயே அந்த நிறத்தைதான் கொண்டிருக்குமா என்றால் அது சந்தேகம்தான். அதிலும் கிரகங்கள், பிற கோள்களின் நிறம் என நாம் நினைப்பது உண்மையிலேயே அந்த நிறம்தானா என்றால்... கேள்விக்குறியேதான். ஏன்? விரிவாக பார்ப்போம்...
கற்பனை படம்
கற்பனை படம்ட்விட்டர்

நிறங்களை நாம் அடையாளம் காண்பது எப்படி?

நம் கண்களில் இருக்கும் விழித்திரையானது (லென்ஸ்) படங்களைப் பெற்று அவற்றை நரம்புகளுக்கு சமிக்ஞைகளாக மாற்றி அனுப்பும். அவை பார்வை நரம்பின் உதவியினால் மூளைக்கு அதை அனுப்பும். மூளைதான் இது சிவப்பு, இது கருப்பு என்று நமக்கு உணர்த்துகிறது.

கண்
கண்freepik

இது இப்படி இருக்க நம் பூமியை சுற்றியுள்ள கோள்களை நாம் நம் கண்களால் பார்ப்பதே இல்லையே... பின் அப்படி அதன் நிறங்களை நாம் அறிகிறோம் என்ற கேள்வி நமக்கு எழும்...

நாம் விண்வெளிக்கு அனுப்பும் விண்கலத்தில் உள்ள கேமராக்கள் விண்வெளியில் உள்ள கிரகங்களை படம் எடுத்து நமக்கு அனுப்புகிறது. அதன் மூலமே அந்த வண்ணங்களை நாம் அறிகிறோம். ஆனால் அங்கும் ஒரு ட்விஸ்ட்... அதாவது, விண்கலத்திலுள்ள கேமராக்கள் எடுக்கும் வண்ணப்படங்கள் நம் கண்களுக்கு அப்படியே தெரிகிறதா என்றால் அது கேள்விக்குறிதான்.

நம் கண்களுக்கு புலப்படாத வண்ணங்களையும் கிரகங்களானது பெற்றிருக்கலாம். இதனாலேயே, “விண்கலன்களும் விண்வெளி தொலைநோக்கிகளும் பெரும்பாலும் வண்ணப்படங்களை எடுப்பதில்லை” என்று வானியல் ஆராய்ச்சிக்கான பலகலைக்கழகங்களின் சங்கத்தின் அறிவியல் துணைத்தலைவரும் பிளானட்டரி சொசைட்டியின் இயக்குநர்கள் குழுவின் துணைத்தலைவருமான ஹெய்டி ஹாம்மல் கூறினார்.

மனிதக் கண்கள் பொதுவாக 380 மற்றும் 700 நானோமீட்டர்களுக்கு இடைப்பட்ட அலைநீளங்களைக் கொண்ட ஒளியை மட்டுமே காண முடியும். இந்த அலைநீளங்கள் ஊதா நிறத்திலிருந்து சிவப்பு நிறம் வரை மட்டுமே கொண்டிருக்கும்.

இதற்கு மேல் அலைநீளங்களை ஒரு கிரகமானது கொண்டிருந்தால் அந்த நிறத்தை நம் கண்கள் அளவிடாது. ஆனால் நாம் ஆராய்சிக்காக அனுப்பும் அதி நவீன கேமராக்களால் அவற்றை பதிவிடமுடியும். அப்படி பதிவிட்டு அனுப்பப்படும் நிறங்கள் அனைத்தையும் பார்க்கும் நம் கண்களானது, 380-700 நானோமீட்டர்குள்ளாகவே அதை கணக்கிட்டுக்கொள்ளும். ஆக நமது கண்களைப் பொருத்தவரையில் கிரகங்களானது 7 நிறங்களுக்குள்தான் அடக்கமாகியிருக்கும்.

colors
colors

விஞ்ஞானிகள் விண்வெளியில் சூரிய குடும்பத்தின் நிறங்கள் எப்படி இருக்கும் என்பதை நம்மால் சொல்ல முடியாது என்கிறார்கள். இருப்பினும் ஆராய்சியாளர்கள் கோள்கள் எந்த எந்த நிறங்களை பெற்றிருக்கிறது என்று தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். அப்படி செய்யப்பட்ட ஆய்வுகளில், நமக்கு இதுவரை தெரியவந்துள்ள கிரகங்களின் நிறங்கள், இதோ...

கற்பனை படம்
விண்வெளியில் அடுத்த மைல்கல்... சூப்பர் நோவாவை கண்டுபிடித்த XPoSat; அசத்திய இஸ்ரோ!

1. மெர்குரியின் நிறம் (புதன்)

புதன்
புதன் நாசா

நாசாவின் மெசெஞ்சர் விண்கலமானது 4,30,700, நானோ மீட்டர்களைக்கொண்ட கேமராக்களின் உதவியுடன் 2008ல் புதனை படம்பிடித்தது. இதன்படி மெர்குரி என்ற புதன் கிரகமானது சாம்பல், சற்று பழுப்பு நிற தோற்றம் கொண்டது. கிட்டத்தட்ட பூமி, சந்திரனின் நிறத்தை ஒத்ததாகவே இருக்கும்.

2. வீனஸ் நிறம்

வீனஸ்
வீனஸ்நாசா

1974ல் மரைனர்10 என்ற விண்கலத்திலிருந்த கேமராவின் உதவியுடன் இது புகைப்படம் எடுக்கப்பட்டது. மேகத்தால் மூடப்பட்ட வீனஸ் மஞ்சள் பழுப்பு நிறத்துடன், பிரகாசமான வெள்ளை நிறத்தில் உள்ளது.

3. பூமியின் நிறம்

பூமி
பூமிநாசா

அப்போலோ 13 விண்வெளி குழுவினர் 1970ல் பூமியை புகைப்படம் எடுத்தனர். அதில் பூமியானது வண்ணமயமாக காட்சியளித்தது. பெரும்பாலும் நீலம், பச்சை, ப்ரௌன் மற்றும் வெள்ளை நிறங்களை கொண்டிருந்தது. அதிகபட்சமாக நீல நிறமே பரவியிருந்தது. இதற்கு காரணம், கடற்பறப்பும் வளிமண்டலமும் என சொல்லப்படுகிறது.

4. செவ்வாயின் நிறம்

செவ்வாயை நாம் சிவப்பு கிரகம் என்று அழைப்போம். அதில் சமவெளிகள், குன்றுகள், எரிமலைகள், நீர் வழித்தடங்கள் என்று மேற்பரப்பு முழுவதும் சிவப்பு மற்றும் ஆரஞ்சு முதல் பழுப்பு நிறம் வரை மாறுபடும்.

செவ்வாயில் இருக்கும் வெள்ளை தொப்பி
செவ்வாயில் இருக்கும் வெள்ளை தொப்பிநாசா

இந்த கிரகத்தில் பருவகாலங்களில் வெள்ளை துருவ தொப்பிகள் தென்படும். அது சில நேரங்களில் புலப்படும், சிலசமயம் மேகங்கள், தூசி புயல்களால் மூடப்பட்டுவிடும். சூரியனிலிருந்து கிரகத்தின் தூரம் குறையும் போதும் கூடும் போதும் இக்கிரகத்தின் நிறத்திலும் மாற்றம் ஏற்படுகின்றது.

5. வியாழன் நிறம்

வியாழன்
வியாழன்நாசா

இந்த கிரகம் வெள்ளை, பழுப்பு, மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு என்று பல வண்ணங்களை கொண்டிருக்கிறது. 2020- ஆகஸ்ட் மாதம் ஹப்பிள் என்ற தொலைநோக்கியின் உதவியில் நாசா இதை படம்பிடித்தது

6. சனியின் நிறம்

சனி
சனிநாசா

சனி கிரகம் பலவிதமான வண்ணங்களைக் காட்டுகிறது. குறிப்பாக வெளிர் மஞ்சள், பழுப்பு நிறத்தைக்கொண்டும், சில சமயங்களில் சிவப்பு, பச்சை மற்றும் நீலத்தை கொண்டும் இருக்கிறது. 2020 ஜூலையில் நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி உதவியுடன் இது படம்பிடிக்கப்பட்டுள்ளது.

7. யுரேனஸ் நிறம்

யுரேனஸ்
யுரேனஸ்நாசா

1986ல் வாயேஜர் 2 என்ற விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவின் உதவியில் எடுக்கப்பட்ட யுரேனஸ் வெளிர் பச்சை கலந்த நீல நிறத்தில் காணப்படுகிறது. இது அதன் சுற்றுவட்டப்பாதையில் சுழலும் போது ஒரு சமயம் நீல நிறமாகவும் மற்றொரு சமயம் பச்சை நிறமாகவும் தோன்றுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

8. நெப்டியூன் நிறம்

இது யுரேனஸ் போன்று வெளிர் நீலம், பச்சை நிறத்தில் தெரிந்தாலும் இதில் நீலநிறம் சற்று அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நெப்டியூன்
நெப்டியூன்நாசா

1989ல் வாயேஜர்2 (ஆளில்லா விண்ணாய்வி) மூலம் ஆராய்ந்ததில் இதன் உண்மையான நிறம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com