மகாராஷ்டிரா: ரக்ஷா பந்தனையொட்டி தங்கம், வெள்ளியால் ஆன ராக்கி கயிறுகள் அறிமுகம்

மகாராஷ்டிரா: ரக்ஷா பந்தனையொட்டி தங்கம், வெள்ளியால் ஆன ராக்கி கயிறுகள் அறிமுகம்
மகாராஷ்டிரா:  ரக்ஷா பந்தனையொட்டி தங்கம், வெள்ளியால் ஆன ராக்கி கயிறுகள் அறிமுகம்

மகாராஷ்டிராவில் ரக்ஷா பந்தனையொட்டி, தங்கத்தால் ஆன மணிகள் பொருத்தப்பட்ட ராக்கி கயிறுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சகோதர பந்தத்தைப் போற்றும் ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தில் முக்கிய அம்சமாக, சகோதரர்களின் கைகளில் சகோதரிகள் ராக்கி கயிறைக் கட்டுவது வட நாட்டு பண்பாடு, வழக்கமாக வண்ண வண்ண கயிறுகள் கட்டப்பட்டு வந்தன.

தற்போது தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன மணிகள் பொருத்தப்பட்ட ராக்கி கயிறுகளும், முத்துக்கள் கோர்க்கப்பட்ட ராக்கி கயிறுகளும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகைக்கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றை வாங்கி சகோதரர்களின் கைகளில் கட்ட, பெண்கள் ஆர்வத்துடன் நகைக்கடைகளின் படியேறி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com