சென்னையில் கடந்த 10 மாதங்களில் லிட்டருக்கு ரூ 18.62 உயர்ந்தது பெட்ரோல் விலை

சென்னையில் கடந்த 10 மாதங்களில் லிட்டருக்கு ரூ 18.62 உயர்ந்தது பெட்ரோல் விலை
சென்னையில் கடந்த 10 மாதங்களில் லிட்டருக்கு ரூ 18.62 உயர்ந்தது பெட்ரோல் விலை

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 105 ரூபாயைத் தாண்டி விற்பனையாகிறது. டீசல் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் விலை உயர்வினை ஆராயும்போது, நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் பெட்ரோல் விலை சென்னையில் லிட்டருக்கு ரூ 18.62 காசுகள் விலை உயர்ந்துள்ளது தெரியவருகிறது. சென்னையில் நடப்பு நிதியாண்டின் ஜனவரி முதல் நாளன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 86.51 -க்கு விற்கப்பட்டது. அடுத்து வந்த மாதங்களில் பெட்ரோல் விலை ஏறுமுகத்திலேயே காணப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி அதன் விலை 102 ரூபாய் 49 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

தமிழக அரசு பெட்ரோலுக்கான வரியில் 3 ரூபாய் குறைத்து உத்தரவிட்ட நிலையில், செப்டம்பரில் அதன் விலை 99 ரூபாய் 8 காசுகளாக விலை குறைந்து காணப்பட்டது. அடுத்து வந்த அக்டோபர் ஒன்றாம் தேதி பெட்ரோல் விலை 99 ரூபாய் 58 காசுகளாக இருந்த நிலையில், மாத இறுதியில் கணிசமாக உயர்ந்து இன்று ஒரு லிட்டர் 105 ரூபாய் 13 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் டீசல் விலை லிட்டருக்கு 22 ரூபாய் 4 காசு அதிகரித்துள்ளது. சென்னையில் நடப்பு நிதியாண்டின் தொடக்க நாளில் டீசல் ஒரு லிட்டர் 79 ரூபாய் 21 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்தடுத்த மாதங்களிலும் டீசல் விலை ஏறுமுகத்திலேயே காணப்பட்டது. ஜூன் மாதத்தில் டீசல் ஒரு லிட்டர் 90 ரூபாயைத் தாண்டியது.

ஜூலையில் ஒரு லிட்டர் டீசல் 93 ரூபாய் 72 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஒரு லிட்டர் டீசல் 93 ரூபாய் 38 காசுகளாக இருந்தது. அக்டோபர் 1ஆம் தேதி 94 ரூபாய் 74 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இன்று டீசல் விலை ஒரு லிட்டர் 101 ரூபாய் 25 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com