சென்னை: உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனை; 200 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

சென்னை: உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனை; 200 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
சென்னை: உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனை; 200 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
சென்னை சிந்தாதிரிபேட்டை தனியார் மீன் கிடங்கில், உணவு பாதுகாப்புத்துறையினர் நடத்திய திடீர் ஆய்வில் 200 கிலோ கெட்டு போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிந்தாதிரிப்பேட்டை தனியார் மீன் கிடங்கில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். கிடங்கில் இருந்த மீன்களை அதிகாரிகள் சோதித்தபோது அவை பல நாட்களுக்கு முன் பதுக்கி வைக்கப்பட்ட மீன்கள் என்றும், கெட்டுப்போன அந்த மீன்களை ரசாயன மருந்து தெளித்து விற்பனைக்கு அனுப்ப முயன்றதும் தெரியவந்தது. 200 கிலோ அளவுக்கான அந்த மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, காசிமேடு, நொச்சிக்குப்பத்தில் உள்ள கிடங்குகளிலும் ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பார்மலின் மீன்கள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com