எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோதல்

எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோதல்

எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோதல்
Published on
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதில் அதிமுகவினர் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு வருகை புரிந்தார். அப்போது அவருக்கு வரவேற்பு அளிக்கும்போது அதிமுகவினர் மோதிக்கொண்டனர். சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் மற்றும் மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com