Victoria Beckham
Victoria Beckhampt web

ஃபேஷன் உலகின் புதிய ட்ரெண்ட்.. வெள்ளை உடைகளுக்கு பெருகும் மவுஸ்!

பெண் பிரபலங்கள் வெள்ளை சட்டை அணிவது தற்போது ஃபேஷன் உலகில் புதிய ட்ரெண்ட் ஆகியுள்ளது.
Published on

ஒருவரது தோற்றத்தை அதிக மெனக்கெடல் இன்றி கம்பீரமாகக் காட்டக்கூடிய மென் சக்தி உடையாக வெள்ளைச் சட்டை பார்க்கப்படுகிறது. சர்வதேச  பெண் பிரபலங்கள் குறிப்பாக பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் பல பொதுநிகழ்வுகளில் வித விதமான வெள்ளைச் சட்டையுடன் தோன்றியது கவனம் ஈர்த்தது.

விக்டோரியா பெக்காம் (Victoria Beckham) தனது புதிய Netflix ஆவணப்பட விளம்பரத்தில் திறந்த காலருடன் வெள்ளை சட்டையை அணிந்து தோன்றியது ஃபேஷன் உலகில் பெரும் பேசுபொருளானது.

தன்னைப் பற்றிய புதிய Netflix தொடரின் தொடக்கநிகழ்வில் பங்கேற்ற சசெக்ஸ் இளவரசி மேகன் (The Duchess of Sussex/Meghan), அண்மையில் அருங்காட்சியகத்திற்கு வருகை தந்த வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன்(The Princess of Wales/Kate Middleton), புதிய ஆல்பத்தை அறிவித்த பாப் நட்சத்திரம் டெய்லர் ஸ்விஃப்ட் (Taylor Swift), வெனிஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற லாரா டெர்ன் (Laura Dern), மற்றும் புக்கர் பரிசு நடுவர் சாரா ஜெசிகா பார்க்கர் (Sarah Jessica Parker) ஆகியோரும் வெள்ளை சட்டையை அணிந்திருந்தனர். இதன் விளைவாக, பிரிட்டனிலும் பிற உலக நாடுகளிலும் வெள்ளை சட்டைகளின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.

Victoria Beckham
”ODI போட்டிகளில் விளையாட விரும்புகிறேன்..” - பயிற்சியாளர் சொன்னதை பகிர்ந்த ஜடேஜா

இது ஒரு காலத்தில் அதிகாரத்தைக் குறிக்கும் ஆடையாகப் பார்க்கப்பட்டது. அலுவலகத்துக்கோ அலுவல் ரீதியான நிகழ்வுகளுக்கோ மட்டுமே அணிந்து செல்லப்படுவதாக இருந்தது. ஆனால், தற்போது பட்டன்களைத் தளர்த்தியோ அல்லது ஸ்லீவ்களை மடித்தோ கேஷுவல் உடையாகவும் அணியப்படுகிறது. எனவே பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், பல வயதில் உள்ள பெண்களும் வெள்ளைச் சட்டையை விரும்பி அணிகின்றனர்.

Victoria Beckham
பிஹார் தேர்தல்| நாட்டுப்புற பாடகர்களை குறிவைக்கும் கட்சிகள்.. வாக்குகளை கவர புது வியூகம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com