“பிரசவத்துக்கு 2 நாள் முன்புதான் கர்ப்பம்னே தெரியும்”-ஷாக் கொடுத்த USA பெண். நடந்தது என்ன?

“பிரசவத்துக்கு 2 நாள் முன்புதான் கர்ப்பம்னே தெரியும்”-ஷாக் கொடுத்த USA பெண். நடந்தது என்ன?
“பிரசவத்துக்கு 2 நாள் முன்புதான் கர்ப்பம்னே தெரியும்”-ஷாக் கொடுத்த USA பெண். நடந்தது என்ன?

பிரசவம் ஆகும் 48 மணிநேரத்துக்கு முன்பு வரை பெண் ஒருவருக்கு தான் அத்தனை மாதங்களாகவும் கர்ப்பிணியாகத்தான் இருந்தோம் என்பதே தெரியாமால் இருந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அப்படியான சம்பவம் ஒன்று அமெரிக்காவைச் சேர்ந்த பெய்டன் ஸ்டோவர் என்ற 23 வயது பெண்ணுக்கு நடந்திருக்கிறது.

ஒமஹா பகுதியில் ஆசிரியராக இருக்கும் பெய்டனுக்கு தான் கருவுற்றிருந்த நாட்களில் உடல் சோர்வை தவிர்த்து கர்ப்பிணியாக இருப்பதற்கான வேறு எந்த விதமான அறிகுறிகளும் தென்படவில்லையாம். அந்த உடல் சோர்வும் தன்னுடைய புது வேலையால் நேர்ந்திருக்கும் என்று அசட்டையாக இருந்திருக்கிறார்.

இருப்பினும் அந்த சோர்வு தொடர்ந்து இருந்ததாலும் கை கால்களில் வீக்கம் இருந்ததாலும் ஒரு வழியாக பெய்டன் மருத்துவரை அணுகியிருக்கிறார். அங்கு பெய்டனை சோதித்து பார்த்ததில் அவர் கருவுற்றிருக்கிறார் என தெரிய வந்திருக்கிறது. முதலில் அதிர்ச்சியுற்ற மருத்துவர் மீண்டுமொருமுறை பெய்டனுக்கு பரிசோதனைகளை எடுத்து பார்த்திருக்கிறார்.

அப்போது பெய்டன் கர்ப்பமாகத்தான் இருக்கிறார் என்பது ஊர்ஜிதமாகியிருக்கிறது. இது குறித்து அறிந்த பெய்டன் மற்றும் ட்ராவிஸ் கோஸ்டெர்ஸ் தம்பதி ஷாக்கானதோடு இந்த நல்ல செய்தியை இத்தனை நாளாக கொண்டாட முடியாமல் போய்விட்டதே என விரக்தியடைந்திருக்கிறார்கள்.

இதனையடுத்து, பெய்டனின் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடுகளில் மாறுதல்கள் இருப்பதோடு உயர் ரத்த அழுத்தமும் இருந்திருக்கிறது. ஆகையால் சி-செக்‌ஷன் முறையில் அறுவை சிகிச்சை செய்வதாக முடிவெடுக்கப்பட்டு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஏனெனில் பெய்டனின் உடல்நிலை இதற்கு மேலும் குழந்தையை கருவில் தாங்குவதற்கு ஏற்றதாக இருக்காது என்பதால் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

அதன்படி அறுவை சிகிச்சை செய்து சுமார் 1.8 கிலோ எடை கொண்ட குழந்தையை வெளியே எடுத்திருக்கிறார்கள். மருத்துவர்களின் கூற்றுப்படி சுமார் 10 வாரங்களுக்கு முன்பே குழந்தையை பெய்டன் சி-செக்‌ஷன் மூலம் பெற்றிருக்கிறாராம். pre-eclampsia என்ற பிரசவத்துக்கு முந்தைய பாதிப்பு இருந்ததாலும் உயர் ரத்த அழுத்தம் இருந்ததாலும் பெய்டனுக்கு அதற்கான சிகிச்சையும் வழங்கப்பட்டிருக்கிறது.

சிகிச்சைக்கு பிறகு தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும், பெய்டன் மட்டும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், தொடர் சிகிச்சையில் உள்ள குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெய்டன் - ட்ராவிஸ் தம்பதி காத்திருப்பதாகவும், அந்த குழந்தைக்கு காஷ் என பெயரிட்டிருப்பதாகவும் அமெரிக்க ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com