\
veeramani recently became the target of a massive online prank
influencer veeramaniX

“நண்பர்களே என்னால முடியல” ஆடிப்போன இன்புளுயன்சர் வீரமணி.. அதிர வைத்த நக்கல் நெட்டிசன்கள்!

ஒரே ஒரு தவறால் பெரிய சிக்கலில் சிக்கி இருக்கிறார் இன்ஸ்டாகிராம் இன்புளுயன்சர் வீரமணி.
Published on: 

செய்தியாளர் - கார்த்திகேயன்

இன்றைய காலகட்டத்தில் சினிமா நடிகர்களுக்கு இணையாக இன்ஸ்டாகிராம் இன்புளுயன்சர்களும் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். தினம்தோறும் வீடியோக்கள் பதிவிடுவதால், மக்கள் மனதை எளிதாக ஆக்கிரமித்துள்ள அவர்கள், சிறு விஷயங்களில் சிக்கினாலே, இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. ஆனால், தற்போது ஒரு பிரச்சனையிலேயே ஒரு இன்புளுயன்சர் சிக்கியிருக்கிறார். மதுரையை சேர்ந்தவர் இன்புளுயனசர் வீரமணி. இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்களை கொண்ட இவர், தனது அன்றாட வாழ்க்கை குறித்தும், நிகழ்வுகள் குறித்தும் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

influencer veeramani
influencer veeramaniX

சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், தீபாவளி பண்டிகை வரப்போகிறது. எனக்கு ஒரு ஸ்வீட் பாக்ஸை அனுப்பி விடுங்கள் என்று கூறிய வீரமணி, தனது வீட்டின் முகவரியையும், அனுப்பி இருந்தார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சிலர், அந்த முகவரிக்கு பல்வேறு பொருட்களை ஆர்டர் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதில், என்ன பிரச்சனை இருக்கிறது? பொருட்களை தானே அனுப்பி வைத்தார்கள் என்று நம்பினால், அங்கு தான் மிகப்பெரிய ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். அதாவது, அனுப்பிய பொருட்கள் அனைத்தையும், கேஷ் ஆன் டெலிவரி என்ற ஆப்ஷனில் அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த முறையின் மூலம் அனுப்பியதால், அந்த பொருட்கள் அனைத்திற்கும் இவரே பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், வரும் பொருட்கள் அனைத்தையும், நான் ஆர்டர் செய்யவில்லை என்று திருப்பி அனுப்பிய வீரமணி, போதும் நண்பர்களே நிறுத்தி விடுங்கள் என்று மிகவும் கவலையுடன், இன்னொரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இந்த சம்பவம் இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

YouTube, Facebook, Instagram போன்ற சமூக வலைதள செயலிகள், பொது தளங்களாக உள்ளன. இந்த தளங்களில், தங்களது தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவது ஆபத்து என்று, பல்வேறு முறை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவிட்டது. இருப்பினும், ஒருசிலர் இதுமாதிரி வீட்டின் முகவரியையும், தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டு பிரச்சனையில் சிக்குகின்றனர்.

veeramani recently became the target of a massive online prank
கணிப்புகளை பொய்யாக்கிய தங்கம்.. திடீர் விலையேற்றத்துக்கு காரணம்.. அடுத்து விலை கூடுமா.. குறையுமா?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com