’வலிமை அப்டேட் எப்போது கிடைக்கும்?’ - நெட்டிசன் கேள்விக்கு வானதி சீனிவாசன் கொடுத்த பதில்

’வலிமை அப்டேட் எப்போது கிடைக்கும்?’ - நெட்டிசன் கேள்விக்கு வானதி சீனிவாசன் கொடுத்த பதில்

’வலிமை அப்டேட் எப்போது கிடைக்கும்?’ - நெட்டிசன் கேள்விக்கு வானதி சீனிவாசன் கொடுத்த பதில்

பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வலிமை அப்டேட் எப்போது கிடைக்கும் என நெட்டிசன் ஒருவருக்கு பதில் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜக நேற்று வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. அதில் பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனுக்கு கோவை தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் நெட்டிசன் ஒருவர், பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனிடம் ட்விட்டர் பக்கத்தில் வலிமை அப்டேட் எப்போது கிடைக்கும் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன் "நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி” என்றார். 

முன்னதாக, அஜித் நடிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ படம் குறித்தான அப்டேட்டை அஜித் ரசிகர்கள் தொடர்ந்து சமூகவலைதளங்களில் கேட்டு வந்தனர். அதனைத்தொடர்ந்து இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியிலும் பதாகைகளை ஏந்தியும், முழமிட்டும் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட நிலையில், அதற்கு அஜித் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

<iframe width="716" height="403" src="https://www.youtube.com/embed/s5tCEPH9Gok" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com