\
இரண்டு வாக்குச்சாவடி ஒரே வரிசை எண்: இரண்டுமுறை வாக்களித்த திருச்சி திமுக வேட்பாளர்

இரண்டு வாக்குச்சாவடி ஒரே வரிசை எண்: இரண்டுமுறை வாக்களித்த திருச்சி திமுக வேட்பாளர்

இரண்டு வாக்குச்சாவடி ஒரே வரிசை எண்: இரண்டுமுறை வாக்களித்த திருச்சி திமுக வேட்பாளர்
Published on

திருச்சி மாநகராட்சி 56 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி, இரண்டு வாக்குகளை பதிவு செய்துள்ளார்.

திருச்சி கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் உள்ள 647 ஆம் எண் வாக்குச்சாவடியில், வரிசை எண் 673-ல் உள்ள முத்துலெட்சுமி என்பவரது ஓட்டை மஞ்சுளாதேவி, கையெழுத்திட்டு தவறுதலாக கள்ள ஓட்டாக பதிவிட்டுள்ளார்.

பின்னர் அவர் 646 ஆம் எண் வாக்குச்சாவடியில், வரிசை எண் 673-ல் உள்ள தனது வாக்கை பதிவு செய்துள்ளார். இதையடுத்து திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி இரண்டு ஓட்டுகள் போட்டது குறித்து, அவரை எதிர்த்து போட்டியிடும் அதிமுக, தே.மு.தி.க, பாஜக, நாம் தமிழர் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து மஞ்சுளாதேவி தரப்பினரிடம் கேட்டபோது, வாக்காளர் பட்டியலில் வரிசை எண்ணை சரி பார்ப்பதில் அதிகாரிகள் கவனக்குறைவாக நடந்துக்கொண்டதால் தவறு ஏற்பட்டுவிட்டது என ஒத்துக் கொண்டனர். பின்னர் டெண்டர் முறையில் வாக்காளர் முத்துலட்சுமி தனது வாக்கை பதிவு செய்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com