அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சி தலைவர் அவதூறு பரப்புகிறார் - முதல்‌வர்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சி தலைவர் அவதூறு பரப்புகிறார் - முதல்‌வர்
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சி தலைவர் அவதூறு பரப்புகிறார் - முதல்‌வர்

சாலை பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டதில் எந்த வித முறைகேடும் நடைபெறவில்லை, திமுக ஆட்சியில் தான் டெண்டர் விட்டதில் பல முறைகேடுகள் நடந்துள்ளன என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் பழனிசாமி, ஆன்லைன் வாயிலாகத்தான் சாலை பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டது, அதற்கான தொகையும் ஆன்லைன் வாயிலாக தான் செலுத்தப்பட்டது எனவே இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை எனக் கூறினார். 

திமுக ஆட்சியின் போது தான் அதிக தொகைக்கு சாலை பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டதாக கூறிய முதலமைச்சர், அந்த பட்டியலையும் வாசித்தார். மத்திய அரசை விட குறைவான தொகைக்கே தமிழக அரசு சாலை பணிகளுக்கான டெண்டர் விடுத்திருப்பதாக கூறிய முதலமைச்சர் தற்போது எதிர்க்கட்சியினர் எனது உறவினர் என குற்றம்சாட்டும் நபருக்கு திமுக ஆட்சியிலேயே பல கோடி மதிப்பிலான டெண்டரை வழங்கியுள்ளனர் என தெரிவித்தார்.

அரசு யாருக்கும் ‌சலுகை காட்டவில்லை‌ என தெரிவித்த முதலமைச்சர், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சி தலைவர் அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டினார். ரத்த உறவுகளுக்கு, நெருங்கிய உறவுகளுக்கு எனத் தனித்தனியே வரையறை இருக்கிறது, டெண்டர் எடுத்தவர் இந்த உறவு வரைமுறைகளில் வரவில்லை. எனவே, முறைகேடு எப்படி நடந்திருக்க முடியும் என முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக ஆட்சியில் விடப்பட்ட ஒப்பந்த விலைகளையும், தற்போது விடப்பட்ட ஒப்பந்த விலைகளையும் ஒப்பிட்டு விளக்கமளித்த முதலமைச்சர், தன் மீதான புகாருக்கு விளக்கம் தர தகவல்களைத் தேடும்போதுதான், திமுக செய்த முறைகேடுகள் தெரியவந்துள்ளதாக கூறினார். இது தொடர்பாக திமுக மீது வழக்கு தொடரப்படுமா என்பதை சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசித்துத் தெரிவிப்பதாக பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com