[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

சகோதரரின் ஹெலிகாப்டர் செலவுக்கு 14.91 லட்சத்தை வழங்கிய ஓ.பி.எஸ் 

ops-pays-iaf-14-91-lakh-for-airlifting-ailing-brother

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சகோதரர் மருத்துவ உதவிக்காக பயன்படுத்திய ஹெலிகாப்டர் செலவை வழங்கி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

கடந்த ஜூலை மாதம் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருந்தார். அப்போது அவர் மத்திய ராணுவ  அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க அனுமதி கோரி இருந்தார். நிர்மலா சீதாராமனை சந்திக்கதான் டெல்லி வந்ததாகவும், தனது சகோதரர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றபோது, ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை தந்து உதவியதற்காக நன்றி தெரிவிக்கவே வந்ததாகவும் ஓ.பி.எஸ் தெரிவித்திருந்தார். 

ஆனால் அவரை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை என சர்ச்சை எழுந்தது. ஹெலிகாப்டர் விவகாரத்தை வெளிட்டதால் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோபமடைந்ததாக கூறப்பட்டது. பன்னீர்செல்வத்தை சந்திப்பதற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என மத்திய அமைச்சரே முன் வந்து ட்விட்டரில் விளக்கம் அளித்திருந்தார். எனவே ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினார் பன்னீர்செல்வம். 

அப்போது இது குறித்து விமான நிலையத்திலுள்ள செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், “எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணா கூறியிருக்கிறார்” என்று ஒருவரியில் பதிலளித்துவிட்டு விடை பெற்றார்.

 

மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓ.பன்னீர்செல்வத்தின் இரண்டாவது சகோதரர் பாலமுருகனை உடனடியாக சென்னை கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியிருந்தனர். அப்போது, இரண்டு தனியார் விமான ஆம்புலன்ஸை ஓ.பன்னீர்செல்வம் முதலில் அணுகினார். ஆனால், உடனடியாக வரமுடியாத சூழலில் இருப்பதாக தனியார் விமானங்கள் கூறிவிட்டன.

அந்தச் சூழலில் பெங்களூருவில் இருந்து ராணுவ விமான ஹெலிகாப்டர் உடனடியாக ஒரு மணி நேரத்தில் மதுரை விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டது. பேரிடர் காலத்தில் மட்டுமே ராணுவ விமானம் பயன்படுத்த வேண்டும் என்ற நிலையில், பாதுகாப்பு விதிகளை தளர்த்தி ஓபிஎஸ் சகோதரருக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் தனது சகோதரர் மருத்துவ உதவிக்காக வழங்கப்பட்ட ஹெலிகாப்டர் சேவைக்கான கட்டணத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கிவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கான மொத்த தொகை 14 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயை அவர் தமிழக அரசின் மூலம் ராணுவ விமான நிலைத்திற்கு வழங்கியுள்ளார். இவரது சகோதரருடன் இணைந்து உறவினர் இருவரும் இரண்டு ராணுவ அதிகாரிகளும் பயணித்ததற்கான மொத்த தொகையாக இந்தத் தொகை கணக்கிடப்பட்டுள்ளது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close