அதிமுகவில் பிளவு இல்லை; கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது: தம்பிதுரை

அதிமுகவில் பிளவு இல்லை; கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது: தம்பிதுரை
அதிமுகவில் பிளவு இல்லை; கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது: தம்பிதுரை

அதிமுகவில் பிளவு என்பது இல்லை, ஆனால் கருத்து வேறுபாடு உள்ளது என்று அதிமுகவைச் சேர்ந்த, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் அல்லது நீதிமன்றத்தால் மட்டுமே கட்சியின் பிளவு குறித்து அறிவிக்க முடியும் என்றும் அவர் கூறினார். சென்னை விமான நிலையத்தில் பேசிய தம்பிதுரை, நீட் தேர்வில் இருந்து விலக்குப்பெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.

மேலும், “எந்தக் கட்சியையும் யாரும் கட்டுப்படுத்தவில்லை. அதுபோன்ற நிலை எதுவும் உருவாகவில்லை; உருவாகவும் போவதில்லை. டிடிவி தினகரன் உட்பட அனைவரும் கட்சிப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுக்க எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஓபிஎஸ் தனியாக எம்ஜிஆர் விழா கொண்டாடி வருகிறார். ஆகவே எல்லோருமே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவில் பிளவு என்பது கிடையாது. எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளது. இயக்கத்தில் பிளவு இருக்கிறது என்பதை தேர்தல் ஆணையம்தான் சொல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அப்படி ஒன்றும் சொல்லவில்லை” என்று தம்பிதுரை கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com