பாஜக-க்கு எதிராக கோஷம் எழுப்பிய மாணவி சோபியா மீதான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மத்திய அரசுக்கும், பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவராக இருந்த தமிழிசை செளந்ரராஜனுக்கும் எதிராக விமானத்தில் கோஷம் எழுப்பிய தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி லூயிஸ் சோபியா தன் மீது பதியப்பட்ட வழக்கு இரத்து செய்ய கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
மதுரை உயர்நீதி மன்றம்
மதுரை உயர்நீதி மன்றம்PT

மாணவி லூயிஸ் சோபியா மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தூத்துக்குடி போலீசார் சென்னை பெருநகர காவல்துறை பயன்படுத்தக்கூடிய சட்ட பிரிவினை பயன்படுத்தி உள்ளனர்.

இது சென்னை கோவை மதுரை காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்த முடியும், தூத்துக்குடி போலீசார் இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை என்று அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்பு நிதி வாதத்தை முன் வைத்தார்.

மதுரை உயர்நீதி மன்றம்
சோபியா கைதும்.. தலைவர்கள் கண்டனங்களும்..

நடந்தது என்ன?

கடந்த 2018 ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் சென்னை தூத்துக்குடி விமான பயணத்தின் போது பாஜக கட்சிக்கு எதிராக மாணவி சோபியா கோஷம் எழுப்பினார் என்பது வழக்கு.

தூத்துக்குடியைச் சேர்த்த லூயிஸ் சோபியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,

”கடந்த 2018-ம் ஆண்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த விமானத்தில் பயணித்தேன். அந்த விமானத்தில் அப்போதைய தமிழக பாரதிய ஜனதாவின் தலைவரும், தற்போதைய புதுச்சேரி, தெலுங்கானாவின் கவர்னருமான தமிழிசை செளந்தர ராஜன் பயணம் செய்தார். விமானத்தில் இருந்து இறங்கும் போது மத்திய அரசை விமர்சித்து நான் கோஷம் எழுப்பினேன்.

NGMPC139

இதையடுத்து கோபமடைந்த தமிழிசை செளந்தரராஜன், என்னை மிரட்டும் நோக்கில் தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரது ஆதரவாளர்களும் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். மேலும் இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே பலமுறை விசாரணை செய்து நிலுவையில் இருந்தது.

இதற்கிடையே சோபியா மீதான வழக்கில் புகார்தாரரான தமிழிசை, தற்போது கவர்னராக பதவி வகித்து வருவதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார்.

மேலும் இந்த வழக்கில் தற்போதைய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை ஒரு தரப்பினராக சேர்க்க கோரி தாக்கல் செய்து அண்ணாமலை ஒரு மனு தாரராக உள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்பு நிதி, இந்த வழக்கில் தூத்துக்குடி போலீசார் சென்னை சிட்டி போலீஸ் பயன்படுத்தக்கூடிய சட்ட பிரிவினை பயன்படுத்தி உள்ளனர்.

இது சென்னை கோவை மதுரை காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்த முடியும். தூத்துக்குடி போலீசார் இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியாது அதற்கான அதிகாரம் இல்லை என வாதிட்டு இருந்தார்.

இதனை பதிவு செய்த நீதிபதி தனபால் மாணவி சோபியா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com