\
'தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணையலாம்' அமைச்சர் டி.ஜெயக்குமார்

'தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணையலாம்' அமைச்சர் டி.ஜெயக்குமார்

'தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணையலாம்' அமைச்சர் டி.ஜெயக்குமார்
Published on

தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணைய யாரும் முட்டுக்கட்டையாக இருக்க மாட்டார்கள் என்று மீன்வளத்துறை
அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் பேட்டியளித்த ஜெயக்குமார் "அமமுகவின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. அமமுகவில்
இருக்கும் 4 பேரும் கட்சியில் இருந்து வெளியே வர தயாராக உள்ளனர். கொள்கை, கோட்பாடு, லட்சியம் இல்லாத கட்சி அமமுக பணம் மட்டுமே பிரதானம் என்பது கிடையாது என தமிழக மக்கள் அமமுகவிற்கு பாடம் புகட்டி உள்ளனர். அக்கட்சியின்
நிலை பரிதாபமாக உள்ளது. காற்றில் கரைந்த டீசல் போல் தான் அக்கட்சியின் நிலை. வைகோ திமுகவை கடுமையாக
விமர்சித்தார் ஆனால் அவர் திமுகவுடன் கூட்டணியில் தான் இருக்கிறார். கட்சியை பொறுத்தவரையில் யார் இணைவதாக
இருந்தாலும் கட்சி தான் முடிவு செய்யும் " என்றார் ஜெயக்குமார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com