[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

“பணத்துக்காக பேசுகிறார் தங்க தமிழ்ச்செல்வன்”- வெற்றிவேல்

thanga-tamilselvan-speaks-only-for-money-say-vetrivel

காசு, பணம், துட்டுக்காக அமமுகவையும், தினகரனையும் தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்து பேசுவதாக அமமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் குற்றம்சாட்டியுள்ளார்.

தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு தொடர்பாக புதிய தலைமுறைக்கு வெற்றிவேல் பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “ டிடிவி தினகரனை  நேரில் சந்தித்தபோதுதங்க தமிழ்ச் செல்வன் எதுவும் சொல்லவில்லை. ஆனால் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்குவேன் என தங்க தமிழ்ச்செல்வனிடம் ஏற்கெனவே டிடிவி தினகரன் கூறிவிட்டார்.

எம்எல்ஏ பதவி போய்விட்டதாக குழந்தை போல அடம்பிடித்து பேசிவருகிறார் தங்க தமிழ்ச்செல்வன். மைக்கை பார்த்தும் இஷ்டத்துக்கு புத்தி பேதலித்தது போலவும் பேசுகிறார். மற்ற கட்சிகளில் சேர அனைத்து இடங்களிலும் தங்க தமிழ்ச்செல்வன் துண்டு போட்டு வைத்திருக்கிறார். காசு, பணம், துட்டுக்காக அமமுகவையும், தினகரனையும் தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்து பேசுகிறார்” என தெரிவித்தார்.

இதையும் படிக்கலாம்... 'தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணையலாம்' அமைச்சர் டி.ஜெயக்குமார்

முன்னதாக டிடிவி தினகரனை தங்க தமிழ்ச்செல்வன் கடுமையாக விமர்சிக்கும் ஒலிப்பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் டிடிவி தினகரனிடம் பெட்டி பாம்பாக அடங்குவதற்கு என்ன இருக்கிறது என்றும் அவரா எனக்கு சோறு போடுகிறார் என்றும் தங்க தமிழ்செல்வன் சரமாரி கேள்விகளை எழுப்பியிருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close