\
போயஸ்தோட்டம் ஜெயலலிதா சிங்கம் போல் வாழ்ந்த குகை: தம்பிதுரை

போயஸ்தோட்டம் ஜெயலலிதா சிங்கம் போல் வாழ்ந்த குகை: தம்பிதுரை

போயஸ்தோட்டம் ஜெயலலிதா சிங்கம் போல் வாழ்ந்த குகை: தம்பிதுரை
Published on

சென்னையில் உள்ள போயஸ்தோட்டம் ஜெயலலிதா சிங்கம் போல வாழ்ந்த குகை. தற்போது அங்கு நடக்கும் நிகழ்வுகள் மன வருத்தத்தை தருகிறது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
   
கரூரில் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை,  “போயஸ்தோட்டம் என்பது ஜெயலலிதா சிங்கம் போல வாழ்ந்த குகை.  சிங்கம் இல்லாத போது, அங்கு நிகழும் நிகழ்வுகள் கஷ்டத்தையும், மன வருத்தத்தையும் தருகிறது என்றார். அதிமுக தொண்டர்கள் போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின்இல்லத்தை புனிதமாக கருதுகிறார்கள் அந்த இடத்தை மாசுபடுத்தக் கூடாது. அதிமுகவை யாராலும் அழிக்க  முடியாது அதை அழிக்க பிறந்தவர்கள் யாரும் இல்லை.  இந்த இயக்கத்தை யாரும் அழிக்க முடியாது காரணம் மக்கள் இயக்கம், உண்மையான திராவிட இயக்கம்.  அதிமுக அழிந்துவிடும் என கருணாநிதி காலத்தில் இருந்து 35 ஆண்டுகாலமாக சொல்கிறார்கள்” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com