இரைப்பை புற்றுநோய் ஆரம்பத்தில் கண்டுபிடித்தால் 60% உயிர் பிழைக்க வாய்ப்பு
இரைப்பை புற்றுநோயை ஆரம்ப நிலைகளில் கண்டு பிடித்து சிகிச்சை அளித்தால், பாதிக்கப்பட்டவர் உயிர் வாழ 60 சதவிகிதம் வாய்ப்புள்ளதாக மருத்துவர் சந்திர மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் சந்திர மோகன், கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உணவுக் குழாய் மற்றும் இரைப்பை புற்றுநோய் பாதித்தவர்களில் 60 சதவீதமானோர் 5 ஆண்டுகள் உயிர் வாழ்வதாக கூறினார். இந்தியாவில் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் இங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேரே 5 ஆண்டுகள் உயிர்வாழ்வதாக தெரிவித்தார். புற்றுநோய் பாதிப்பின் தொடக்கத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் உயிர் வாழும் காலத்தை அதிகரிக்கலாம் என்றும் குறிப்பிட்டார். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த நவம்பர் 26 ஆம் தேதி ஈ.எஸ்.ஓ. இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மராத்தான் போட்டியும், கலைவாணர் அரங்கில் மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாய்வு நிகழ்ச்சியும் நடத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.
கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மக்களுக்கு வழக்கமாக புற்றுநோய் பரிசோதனை செய்யப்படுவதால் அவர்கள் 5 ஆண்டுகள் உயிர்வாழ சாத்தியம் எனவும் அவர் கூறினார். இதுதொடர்பாக, விழிப்புணர்வு ஏற்படுத்த, நவம்பர் 26ஆம் தேதி E.S.O INDIA என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மாரத்தான் போட்டியும் சென்னை கலைவாணர் அரங்கில் கருத்தரங்கமும் நடைபெற உள்ளதாக மருத்துவர் சந்திரமோகன் கூறினார்.