கண்பார்வையை மேம்படுத்த சில எளியப் பயிற்சிகள்

கண்பார்வையை மேம்படுத்த சில எளியப் பயிற்சிகள்
கண்பார்வையை மேம்படுத்த சில எளியப் பயிற்சிகள்
அதிக நேரம் டிவி, செல்போன் மற்றும் கம்ப்யூட்டரையே பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு கண்களில் பல பிரச்னைகள் வரும். சில எளியப் பயிற்சிகள் கண்பார்வையை மேம்படுத்தும். 
 அடிக்கடி கண்களை நன்றாக திறந்து திறந்து மூடவும். இது கண்களில் ரத்த ஓட்டத்தை சீராக்கும். கண்களில் இருக்கும் அழுக்கை வெளியேற்றும். அதிகப்படியான வெளிச்சம் கண்களைத் தாக்குவதை தடுக்கிறது. சரியாக கண்களை மூடி விழிக்காதபோது கண்கள் வறட்சியாவதோடு, வீக்கம் மற்றும் பார்வைத் திறன் குறைதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது. கண்களை மூடி விழிக்கும்போது அதிக சிரமம் கொடுக்கக்கூடாது. இதை தினமும் குறைந்தது 30 நொடிகள் முதல் 1 நிமிடம் வரை செய்யலாம்.
நேராக ஒரே இடத்தைப் பார்த்துக்கொண்டு தலையை வலது இடதுபுறமாக திருப்பவும். அதேபோல் மேலிருந்து கீழ், கீழிருந்து மேலாக கொண்டுசெல்லவும். ஆனால் கண்கள் ஒரே இடத்தைப் பார்க்கவேண்டும். இது கண்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. குறைந்தது 1 நிமிடமாவது செய்யவேண்டும். இப்படி ஒருநாளில் பத்துமுறை செய்ய வயதான காலத்திலும் கண்பார்வை மங்காது. 
முதலில் கண்களை வலதுபுறமாக கொண்டுசெல்லவும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொண்டுசென்றால் போதுமானது. அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது. அப்படியே வலதுபுறத்திலிருந்து இடதுபுறமாகக் கொண்டுசெல்லவும். இந்த பயிற்சியை எந்தக் காரணம் கொண்டும் வேகமாக செய்யக்கூடாது. பயிற்சி முடிந்ததும் சில நொடிகள் கண்களை மூடி இருக்கவும். 
கண்களுக்கு ஓய்வுகொடுத்தல் மிகவும் அவசியம். கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் இருந்தால்தான் ஓய்வு கொடுக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதிகநேரம் வெயிலில் சென்றாலோ, செல்போன், டிவி முன்பு இருந்தாலோ, ஒரே இடத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாலோ அடுத்து ஓய்வு என்பது மிகவும் அவசியம். எனவே சிறிது நேரம் கண்களை மூடி மனதில் பிடித்ததை சிந்தித்துக்கொண்டிருங்கள். 
கருவிழிகளை வலது இடதுபுறமாக 5 நொடிகள் கொண்டுசெல்லவும். அதேபோல் மேல் கீழாக 5 நொடிகள் கொண்டுசெல்லவும். அடுத்து கருவிழிகளை வட்டமாக சுழற்றவும். இதை 10லிருந்து 15 நொடிகள் செய்யவும். கண்விழிகளை எட்டுப் போடுவதைப் போன்று கொண்டுசெல்லவும். மெதுவாக செய்யவும். அவசரப்படக்கூடாது.
 கண்விழிகளை முக்கோணம், வட்டம், சதுரம், செவ்வகம் போன்ற கணித வடிவங்களில் கொண்டுசெல்லவேண்டும்.
 
கண்களை ஓரங்களில் விரல்களை வைத்து மெதுவாக உயர்த்தி விடவும். இது கண்களில் உள்ள உள்விழி திரவத்தின் ஓட்டத்தை சீராக்கும். 
 
வெற்று சுவருக்கு நேராக நின்றுகொண்டு ஆள்காட்டி விரலை கண்களுக்கு நேராக உயர்த்தவும். கையை மெதுவாக முன்பின்னாக கொண்டுசெல்லவும். இதைக் குறைந்தது 15 நொடிகள் செய்யலாம். இல்லையென்றால் சிறிது தூரத்தில் உள்ள ஏதேனும் ஒரு பொருளை கூர்ந்து கவனிக்கலாம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com