அதிமுகவில் இருந்து ராஜவர்மன் எம்.எல்.ஏ நீக்கம்

அதிமுகவில் இருந்து ராஜவர்மன் எம்.எல்.ஏ நீக்கம்

அதிமுகவில் இருந்து ராஜவர்மன் எம்.எல்.ஏ நீக்கம்
Published on

அமமுகவில் இணைந்த சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜவர்மன் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன். கடந்த 2016 தேர்தலில் சாத்தூர் தொகுதியில் வென்ற எதிர்கோட்டை சுப்ரமணியன், டிடிவி தினகரன் பக்கம் சென்றதால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளராக வலம் வந்த ராஜவர்மன் சாத்தூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வானார். ஆனால், அதன்பிறகு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் ராஜவர்மனுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவியது. அமைச்சர் மீது கடும் குற்றச்சாட்டுகளை கூறி வந்தார் ராஜவர்மன்.

இதனிடையே நேற்று வெளியான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ராஜவர்மனுக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் உள்ள ராஜவர்மன் இன்று டிடிவி தினகரனை சந்தித்து அமமுகவில் இணைந்தார். இந்நிலையில், எம்.எல்.ஏ ராஜவர்மன் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com