“சோளிங்கரில் கள்ள ஓட்டு போட முயன்ற பாமகவினரை தடுத்தவரை தாக்கியுள்ளனர்” : தினகரன் கண்டனம்

“சோளிங்கரில் கள்ள ஓட்டு போட முயன்ற பாமகவினரை தடுத்தவரை தாக்கியுள்ளனர்” : தினகரன் கண்டனம்
“சோளிங்கரில் கள்ள ஓட்டு போட முயன்ற பாமகவினரை தடுத்தவரை தாக்கியுள்ளனர்” : தினகரன் கண்டனம்

சோளிங்கரில் கள்ளஓட்டு போடமுயன்ற பாமகவினரை தட்டிக்கேட்ட அமமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ஆளும் கூட்டணியின் அதிகார துஷ்பிரயோகத்தை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெமிலி பேரூராட்சி வாக்குச்சாவடிகள் 221 மற்றும் 223 இல் கள்ள ஓட்டு போட வந்த பாமக வினரை தட்டிக்கேட்ட, அமமுக வாக்குச்சாவடி முகவர்கள் குணசேகரன், நித்யா, தட்சிணாமூர்த்தி, திருநாவுக்கரசு ஆகியோர் மீது காவல்துறையினர் முன்பே பாமகவினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக மவுனம் காத்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த கழக வேட்பாளரின் காரின் மீதும் பாமகவினர் தாக்குதல் நடத்தியதை காவல்துறையினர் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள்.

ஆளும் வர்க்கத்தின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை தேர்தல் ஆணையம் இனியும் வேடிக்கை பார்க்காமல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com