திருமணத்துக்கு முன்பு இப்படியொரு சம்பவமா? ராஷ்மிகா செய்த காரியம்! விஜய் தேவரகொண்டா சொன்ன சீக்ரெட்!!
செய்தியாளர் - ராஜ்குமார். ர
தென்னிந்தியத் திரையுலகில் பிரபலமான ஜோடியாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, கடந்த பிப்ரவரி 26-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு விருஷ் என்ற தம்பதியினர் பெயரையும் ரசிகர்கள் வைத்துள்ளனர். இவர்களது காதல் வாழ்க்கை குறித்து நீண்ட காலமாகப் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது திருமணத்துக்கு முன்பு நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்த தகவலை இருவரும் வெளிப்படுத்தியுள்ளனர்.
பாலிவுட் திரைத்துறையில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் கரண் ஜோஹர். `காஃபி வித் கரண்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தி மிகவும் பிரபலமானவர். பாலிவுட் பிரபலங்கள் பங்குபெற்று மனம் திறந்து பேசுவதுதான் இந்த நிகழ்ச்சி . இந்நிகழ்ச்சியின் 9-வது சீஸன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்மிகா மற்றும் விஜய தேவரைக்கொண்ட தம்பதியினர் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
நிகழ்ச்சியில் இருவரிடமும் திருமணத்துக்கு முன்பு யார் முதலில் காதலை வெளிப்படுத்தியது, திருமணத்துக்கான முடிவு எப்படி எடுக்கப்பட்டது என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அப்போது, ராஷ்மிகா தான் தன்னிடம், “நாம் திருமணம் செய்துகொள்ளலாம்” என்று கூறியதாக விஜய் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்த விஜய், நீங்கள் என்னிடம் 100 முறை கேளுங்கள் என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார். இதைக் கேட்ட நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கரண் ஜோஹர், உண்மையிலேயே 100 முறை கேட்டீர்களா என்று ராஷ்மிகாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ராஷ்மிகா, “நான் ஒரு வருடம் முழுவதும் கேட்டுக்கொண்டே இருந்தேன்” என்று தெரிவித்துள்ளார். இதனால் நிகழ்ச்சியில் சிரிப்பலை ஏற்பட்டுள்ளது.
மேலும் விஜய்யிடம், ராஷ்மிகாவைத் தவிர வேறு எந்த நடிகையுடன் சிறந்த திரை வேதியியல் இருப்பதாகக் கருதுகிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது, ராஷ்மிகா உடனடியாக “யாருடனும் இல்லை” என்று பதிலளித்துள்ளார். இதற்குப் பதிலளித்த விஜய், “திருமணத்தின் 101-வது விதி, மனைவி சொல்வதை ஏற்றுக்கொள்வது” என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார். இந்த உரையாடல்கள் இடம்பெற்றுள்ள நிகழ்ச்சியின் புரோமோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
