\
Jailer 2 Success: Nelson and Anirudh Share Their Reaction
Jailer 2X

”திரையரங்குகள் அதிர்கின்றன” - ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துப் பெற்ற நெல்சன், அனிருத்!!

ஜெய்லர் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்.
Published on: 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றத் திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தின், இரண்டாம் பாகம் அக்டோபர் 15-ம் தேதி வெளியாகியிருக்கிறது. ஜெயிலர் 1-ஐ போலவே ஜெயிலர் 2 திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கடந்த, 3 நாட்களில் மட்டும் 320 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச்சூழலில் தான், படத்தின் இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளனர். இதுகுறித்தான, புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் நெல்சன் பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து, அந்தப் பதிவில், ”திரையரங்குகள் அதிர்கின்றன! தலைவர் மேஜிக் எப்போதுமே தனி ரகம் தான். ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு நீங்கள் அளித்து வரும் பிரம்மாண்டமான வரவேற்பிற்கும் அன்பிற்கும் நன்றி. ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடுவதைப் பார்ப்பதை விட பெரிய மகிழ்ச்சி வேறொன்றும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Jailer 2 Success: Nelson and Anirudh Share Their Reaction
3 நாளில் 320 கோடி.. வசூலில் வரலாறு படைக்கும் ஜெயிலர் 2!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com