சித்தராமையா காங்கிரஸ்காரரே அல்ல - சபாநாயகர் கோலிவாத் கடும் தாக்கு
சித்தராமைய்யா காங்கிரஸ்காரரே அல்ல என்றும் அவரால்தான் கட்சி தோல்வி கண்டதாகவும் கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் அதிரடி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சபாநாயகர் கோலிவாத், காங்கிரசின் தலைவராக சித்தராமைய்யா தன்னை கருதிக் கொள்வதாகவும் விமர்சித்துள்ளார். சித்தராமைய்யாவின் பிடிவாதம், அகங்காரம் காரணமாக தேர்தலில் காங்கிரஸ் தோல்வி கண்டதாக கூறியுள்ள கோலிவாத், காங்கிரசில் பலரும் இதே கருத்தைக் கொண்டிருப்பதாகவும் ஆனால், வெளியே சொல்லத் தயங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கோலிவாத் கூறுகையில், “காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைய சித்தராமையாவே பொறுப்பு. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை அழித்துவிட்டார். எனக்கு எதிராக சங்கர் என்ற சுயேட்சை வேட்பாளரை அவர் தான் நிறுத்தினார். அதனால், சில ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுவிட்டேன். அந்தச் சுயேட்சை எம்.எல்.ஏ தற்போது பாஜகவுடன் இணைந்துவிட்டார். இது சித்தராமையாவின் குற்றம்.
சித்தராமையாவை கட்சிக்குள் சேர்க்கக் கூடாது. உண்மையான காங்கிரஸ் தலைவர்கள் பலரை நிராகரித்துவிட்டோம். முன்னாள் மஜதவினரால் கட்சி செயல்படுகிறது. அவர் தன்னுடைய முன்னாள் ஆதரவாளர்களை காங்கிரஸில் ஊக்குவிக்கிறார்கள்” என்றார்.