மோடியிடம் ஓபிஎஸ்-இபிஎஸ்: நடித்துக்காட்டிய துரைமுருகன்

மோடியிடம் ஓபிஎஸ்-இபிஎஸ்: நடித்துக்காட்டிய துரைமுருகன்
மோடியிடம் ஓபிஎஸ்-இபிஎஸ்: நடித்துக்காட்டிய துரைமுருகன்

பிரதமர் மோடியிடம் ஓபிஎஸும், இபிஎஸும் நல்லவர்களாக நடித்து தோப்புக்கரணம் போடுவதாக திமுக முதன்மைச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் நகைச்சுவையுடன் நடித்துக்காட்டினார்.

புதியதலைமுறையில் அக்னிபரீட்ட்சை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ‘மத்திய அரசுக்கு  தமிழக சர்கார் மாதிரி ஒரு சர்க்கார் கிடைக்காது. பணிவான, பவ்யமான, தோப்புக்கரணம் போடும் சர்க்கார் மத்திய அரசுக்கு கிடைக்காது. ஜெயலலிதாவின் ஆளுமை வேறு. அதிமுக கட்சி விவகாரத்திற்கு ஓபிஎஸும், மோடியிடம் போய் ’நமஸ்தே ஜி...’ ஐ ஆம் குட்.. எடப்பாடி இஸ் பேட்... குட் பேட் எனச் சொல்லிவிட்டு திரும்புவார். அடுத்து எடப்பாடி மோடியிடம் போய் ‘நமஸ்தே ஜி... ஐ ஆம் குட். ப்லீவ் மீ. டோண்ட் ப்லீவ் ஓபிஎஸ்’எனச் சொல்லி விட்டு வருவார். உடனே மோடியின் பக்கத்தில் இருப்பவர் கேட்டார், ‘ஐயா.. அவருடனும் பேசுறீங்க. இவருடனும் பேசுறீங்க. நமக்கு கிடைத்த தமிழ்நாட்டின் நல்ல அடிமைகள். இதுக்குமேல என்ன வேணும் தமிழ் நாட்டின் பெயர் கெட்டுப்போவதற்கு’ என நகைச்சுவையாக அவர் நடித்துக்காட்டினார்.     

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com