டிரெண்டிங்
கீழடி தொல்பொருள் அருங்காட்சியகம்: அமைச்சர் தகவல்
கீழடி தொல்பொருள் அருங்காட்சியகம்: அமைச்சர் தகவல்
கீழடியில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்களை வைத்து அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கீழடி அகழ்வாய்வில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர் மாரியப்பன் கென்னடி மற்றும் திமுக உறுப்பினர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். இதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், அருங்காட்சியகம் அமைக்கப்படும் என உறுதியளித்தார்.