\
mr and mrs moorthy couple's allegations went viral on social media
influencer subhaInstagram

“தினமும் எனக்கு டார்ச்சர்” - கதறிய இன்ஸ்டா பிரபலம் சுபா! Mr & Mrs மூர்த்தி சேனல் தம்பதியால் பரபரப்பு

மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் மூர்த்தி சேனல் தம்பதியினர் மாறி மாறி முன்வைத்த குற்றச்சாட்டுகள், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 

செய்தியாளர் - கார்த்திகேயன்

Mr & Mrs மூர்த்தி என்ற பெயரில், YouTube, இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதள பக்கம் உள்ளது. இதில், வேதமூர்த்தி மற்றும் அவரது மனைவி சுபா ஆகியோர் இணைந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். அன்றாட குடும்ப வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை காமெடியாக சித்தரித்து கண்டென்டுகள் உருவாக்கி வந்த இவர்களுக்கு, 4 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்கள் உள்ளனர். ஆனால், கடந்த சில மாதங்களாக தம்பதியினர் இருவரும் இணைந்து, வீடியோக்கள் வெளியிடுவதில்லை. அதற்கு பதிலாக, மூர்த்தி மட்டும் தனது நண்பர்களுடன் இணைந்து வீடியோ வெளியிட்டு வந்தார். அதேபோல சுபாவும் தனியாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

instagram influencers
instagram influencersinstagram

இதனால், இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என்று, சமூக வலைதளங்களில் அவரது ஃபாலோவர்கள் பதிவிட்டு வந்தனர். இதற்கிடையே, வேதமூர்த்தி தனது சமூக வலைதளங்களில் திடீரென 8 பாகங்களாக வீடியோக்களை வெளியிட்டார். அதில், தனது மனைவி குறித்து அதிர்ச்சி அளிக்கும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். தனது மனைவிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. அதனால், சில சமயங்களில் கவர்ச்சியான ஆடை அணிந்து வீடியோ வெளியிட்டார். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அதனால், என்னுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றுவிட்டார் என்று கூறி, பலரையும் அதிர வைத்திருந்தார்.

வேதமூர்த்தியின் இந்த வீடியோவை தொடர்ந்து, பலரும் சுபாவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக, அவரது மனைவி சுபா பதில் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில், “எனது கணவர் வேதமூர்த்திக்கு ஏற்கனவே முதல் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால், அதனை மறைத்துவிட்டு தன்னை திருமணம் செய்துக் கொண்டார். திருமணமான முதல் நாளில் இதுகுறித்து கேட்டதற்கு, என்னை அடித்து துன்புறுத்தினார். சுமார் 8 ஆண்டுகளாக, எனது விருப்பத்திற்கு மாறாக, பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்தால், வீட்டில் இருந்து வெளியேறும்படி கூறுவார். ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து சம்பாதித்த பணத்தில், சுமார் 7 ஆண்டுகளாக மாதம் 70 ஆயிரம் ரூபாயை அவரிடம் கொடுத்திருக்கிறேன். இருப்பினும், என்னை இயந்திரம் போலவே அவர் நடத்தினார் என்பது உள்ளிட்ட பல புகார்களை அழுதபடி முன்வைத்திருந்தார். இவ்வாறு இருவரும் ஒருவரையொருவர் மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த சம்பவத்தில், ஒரு தரப்பினர் சுபாவுக்கும், மற்றொரு தரப்பினர் வேதமூர்த்திக்கும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். எந்த சமூக வலைதளங்கள் பிரபலத்தை கொடுத்ததோ, அதே சமூக வலைதளங்கள் இத்தம்பதியின் பிரிவையும் பகிர்ந்து பிரபலப்படுத்திவருகின்றன. தனிப்பட்ட குடும்ப விவகாரமாக இருக்க வேண்டியவற்றையும் பொதுவெளியில் வீடியோக்களாக பகிர்ந்து தங்கள் பிரச்னையையும் இவர்கள் கன்டென்டுகளாகவே பதிவிட்டு பேசுபொருளாகி இருக்கிறார்கள்.

mr and mrs moorthy couple's allegations went viral on social media
12,500 மடங்கு பாதரசம்! வெள்ளையாக அழகு க்ரீம்! சிறுமி உயிருக்கே வந்த ஆபத்து?