கர்ப்பகாலங்களில் பிளாஸ்டிக் ஆபத்து:  சிசுவுக்கு பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தகவல்

கர்ப்பகாலங்களில் பிளாஸ்டிக் ஆபத்து: சிசுவுக்கு பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தகவல்

கர்ப்பகாலங்களில் பிளாஸ்டிக் ஆபத்து: சிசுவுக்கு பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தகவல்
Published on

கர்ப்ப காலங்களில் தாய்மார்கள் பிளாஸ்டிக்கால் பேக் செய்த பொருட்களை பயன்படுத்துவதால் சிசுவுக்கு பாதிப்பு ஏற்படும் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

பிளாஸ்டிக்கால் பேக் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதைத் கர்ப்பகாலங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் பயன்படுத்தப்படும் ரசாயனம் கருவில் உள்ள சிசுவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ப்பமுற்றுள்ள தாய்மார்கள்  பிளாஸ்டிக்கினால் பேக் செய்யப்பட்ட உணவு மற்றும் குளிர்பானங்களை உட்கொள்ளும் போது குழந்தைகளின் குடலில் பாக்டீரியா மாற்றங்களை ஏற்படுத்துவதையும் இதனால் குழந்தையின் குடல் மற்றும் கல்லீரலில் நீண்டகால வீக்கத்தை ஏற்படுத்தியதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். .

இதேபோன்று முன்பு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில்,வீட்டில் உள்ள மரசாமான்களில் பயன்படுத்தப்படும் ரசாயனம் குழந்தையின்  நுண்ணறிவு திறனை பாதிக்கும் என கண்டறியப்பட்டது. இதேபோல் பிளாஸ்டிக் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க பயன்படும் இரசாயனங்களால் குழந்தைக்களுக்கு ஒவ்வாமை, ஆஸ்துமா ஆபத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வில் அறியப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com