ஜோலார்பேட்டை: அமைச்சர் வீரமணிக்கு ஜேசிபி இயந்திரம் மூலம் 500 கிலோ மலர்தூவி வரவேற்பு

ஜோலார்பேட்டை: அமைச்சர் வீரமணிக்கு ஜேசிபி இயந்திரம் மூலம் 500 கிலோ மலர்தூவி வரவேற்பு
ஜோலார்பேட்டை: அமைச்சர் வீரமணிக்கு ஜேசிபி இயந்திரம் மூலம் 500 கிலோ மலர்தூவி வரவேற்பு

ஜோலார்பேட்டை தொகுதியில் பரப்புரைக்கு வந்த அமைச்சர் வீரமணிக்கு ஜேசிபி இயந்திரத்தின் மூலம் 500 கிலோ எடையுள்ள மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, ஜோலார்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பெத்தகல்லுப்பள்ளி, கேத்தாண்டப்பட்டி, கூத்தாண்டகுப்பம், சின்னமோட்டூர, பெரியமோட்டூர் ஆகிய கிராமப்புற பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது கேத்தாண்டப்பட்டி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் 500 கிலோ எடையுள்ள மலர்களை தூவி அமைச்சர் வீரமணிக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, “விவசாயிகளின் கஷ்டங்களை அறிந்து 12ஆயிரத்து 10கோடி ரூபாய் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார்.

அதேபோல் நகைக்கடன், மகளிர் சுயஉதவி குழுக்களின் கடன்களையும் தள்ளுபடி செய்தார். எனவே அனைத்து சமுதாய மக்களின் கஷ்டங்களை புரிந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் ஓரே முதல்வர் எடப்பாடியார். அரசியல் ஞானிகள் முதற்கொண்டு அரசியல் வித்தகர்கள் வரை எடப்பாடியார் ஆட்சி தொடர வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்” என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com