திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும்: வைகோ அறிவிப்பு

திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும்: வைகோ அறிவிப்பு
திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும்: வைகோ அறிவிப்பு

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்து வரும் 27ம் தேதி திமுக நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக கலந்துகொள்ளும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பேருந்து பயண கட்டண உயர்வுக்கு டீசல் விலை உயர்வை காரணமாக சொல்வதை ஏற்க முடியாது என கூறியுள்ளார். பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2011ஆம் ஆண்டைக் காட்டிலும் 52 விழுக்காடு குறைந்துவிட்டதாக அவர் சுட்டிகாட்டியுள்ளார். ஆனால் தமிழக அரசு 2011ஆம் ஆண்டு பேருந்து பயண கட்டணத்தை 60 விழுக்காடு உயர்த்தியது எனவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு அறிவித்துள்ள பேருந்து பயணக் கட்டண உயர்வு தனியார் ஆம்னி பேருந்து கட்டணத்தை விட அதிகரித்துள்ளதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார். பேருந்து பயணக் கட்டண உயர்வால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதுடன் பொருட்கள், காய்கறி, பழங்களின் விலைகளும் கடுமையாக உயரும் என அவர் தெரிவித்துள்ளார். மக்களின் கோபத்தையும் கொந்தளிப்பையும் தமிழக அரசுக்கு உணர்த்திடும் வகையில் ஜனவரி 27ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக நடத்த இருக்கிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும் என அறிவித்துள்ளார்.

முன்னதாக பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 27ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்ட‌ம் நடத்தப்படும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com