தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் - கனிமொழியை சந்தித்த மம்தா பேட்டி

தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் - கனிமொழியை சந்தித்த மம்தா பேட்டி
தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் - கனிமொழியை சந்தித்த மம்தா பேட்டி

தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் என்று மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி நான்கு நாள் பயணமாக இன்று டெல்லி வந்துள்ளார். டெல்லியில் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களை தனித்தனியே சந்தித்து பேசினார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக எம்பி கனிமொழி, சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத், ராஷ்ட்ரீய ஜனதாதளம் எம்பி மிசா பாரதி உள்ளிட்டோரை மம்தா சந்தித்து பேசினார். 

தலைவர்களுடன் தற்போதைய தேசிய அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகவும் வரும் 2019 மக்களவை தேர்தல் விறுவிறுப்பான ஒன்றாக இருக்கும் என சந்திப்புகளுக்கு பின் மம்தா தெரிவித்தார். மேலும், கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்த மம்தா, தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் என்று கூறினார்.
தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவரும் அம்மாநில முதல்வருமான சந்திரசேகர ராவை மம்தா சந்தித்து பேசியிருந்தார். மத்தியில் பாஜக, காங்கிரசுக்கு மாற்றாக 3வது அணியை கட்டமைக்கும் முயற்சியாகவே இச்சந்திப்புகள் பார்க்கப்படுகிறது. பாஜக மூத்த தலைவர்கள் யஷ்வந்த் சின்ஹா, மற்றும் அருண் ஷோரியை நாளை சந்திப்பதாக மம்தா கூறினார். யஷ்வந்த் சின்ஹா பாஜக தலைமையுடன் உறவுகள் சரியில்லாத நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com