\
Bittu Tabahi’s River Cleanup Effort Ends in Tears
BITTU TABAHIINSTAGRAM- BITTU TABAHI

நதியைச் சுத்தம் செய்த ஹீரோ! இன்று சோகத்தில் மூழ்கியது ஏன்? Bittu Tabahi-ன் கண்ணீர் வீடியோ

8 மாதங்கள் போராடி அஜினார் நதியைச் சுத்தம் செய்த Bittu Tabahi, மீண்டும் பிளாஸ்டிக் குப்பைகளால் நதி மாசடைந்ததால் வேதனையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Published on: 

நதியை சுத்தம் செய்து இணையத்தை கலக்கி வந்த செல்லப்பிள்ளை பிட்டு தபாஹி (Bittu Tabahi) தற்போது மனமுடைந்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அவருக்கு என்ன நடந்தது ? அவர் மனமுடைவதற்கு என்ன காரணம் பார்க்கலாம்..

மத்தியப் பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள அஜ்னார் நதியில் பல டன் கணக்கிலான குப்பைகள் தேங்கியிருந்தது. இதனை பார்த்து சகித்துக்கொள்ள முடியாமல் ஆற்றில் களமிறங்கி தனது சொந்த முயற்சியால் சுத்தம் செய்ய தொடங்கினார் பிட்டு டாபி இளைஞர்.. கையில் எந்த நவீன உபாகரணமும், இயந்திரங்களும் இல்லாமல் சுத்தம் செய்தார். 8 மாத கடின உழைப்பால் அஜினர் ஆற்றை பள பளவென மாற்றி அதனுடைய before after விடீயோக்களை அவரது இன்ஸ்டாகிராம் -ல் பதிவிட்டு இணையத்தில் வைரல் ஆனார். இதனால், அவருக்கு தோல் நோய்கள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அவரது இந்த வியக்க வைக்கும் முயற்சி நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்து.. சோசியல் மீடியா முழுவதும் வளம் வந்து கொண்டிருந்தார். அவருக்கு அரசு சார்பிலும், சர்வதேச அளவிலும் அங்கீகாரமும் கிடைத்திருந்தது.

RIVER
RIVER BITTU TABAHI

இப்படி அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற பிட்டு தாபி தற்போது மனமுடைந்து இன்ஸ்டாகிராம் -ல் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில்

எட்டு மாதங்கள் தான் செய்த கடின உழைப்பு இப்படி வீணாகிவிடும் என்று நினைக்கவில்லை என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்புதான் நதிக்கரைகள் சுத்தமாக இருந்தன. ஆனால், இப்போது மீண்டும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் குப்பைகளால் நிரம்பி மாசு பட்டு விட்டதாக அவர் மனம் உடைந்து பதிவிட்டுள்ளார்.

ஆனால், அவர் வெறுமனே வருத்தத்தைப் பதிவு செய்துவிட்டு விலகாமல், மீண்டும் நதியில் இறங்கி, அங்கு குவிந்திருந்த பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றத் தொடங்கியிருக்கிறார். அதோடு, மீண்டும் மீண்டும் குப்பைகள் சேர்வதை எப்படித் தடுக்கலாம், குப்பைகளை அகற்ற இன்னும் என்ன வழிகள் இருக்கின்றன என்று இணையவாசிகளிடம் ஆலோசனையும் கேட்டிருக்கிறார்.

BITTU TABAHI
BITTU TABAHI INSTAGRAM BITTU TABAHI

அவரது பதிவைப் பார்த்த பலரும், நதியைச் சுத்தம் செய்யும் முயற்சியைப் பாராட்டியதுடன், குப்பைகளைக் கொட்டுபவர்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிட்டுவின் இந்தப் பதிவுக்குக் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன. அவரை ஒரு ஹீரோ என்று பாராட்டிய பலர், தொடர்ந்து இந்தப் பணியை மேற்கொள்ள ஊக்கமளித்தனர். அதேநேரத்தில், ஒவ்வொரு முறையும் அவரே வந்து சுத்தம் செய்வதைவிட, குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலர் கருத்துத் தெரிவித்தனர். நதியில் இறங்கிக் குப்பைகளை அகற்றும்போது பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

Bittu Tabahi’s River Cleanup Effort Ends in Tears
கரப்பான் கட்சியைத் தொடர்ந்து ’ஈ’ கட்சி.. உருவானது ஏன்? யாருக்குப் போட்டி?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com