\
Makkhi Janta Party is a viral online satirical political page
Makkhi Janata Party Instagram

கரப்பான் கட்சியைத் தொடர்ந்து ’ஈ’ கட்சி.. உருவானது ஏன்? யாருக்குப் போட்டி?

கரப்பான் ஜனதா கட்சியைப்போலவே மக்கி ஜனதா கட்சி என்ற ஒரு புதிய அரசியல் இயக்கம் online-ல் உலா வந்து கொண்டிருக்கிறது.
Published on: 

செய்தியாளர் - வெற்றிசெல்வி

கரப்பான் பூச்சியைத் தொடர்ந்து தற்போது ’ஈ’யும் அரசியல் ட்ரெண்டிங்கில் இணைந்துள்ளது. ’ஈ’ எமோஜியை வைத்து ஒரு புது கட்சி online-இல் சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த online கட்சிக்குப் பின்னால் இருக்கும் கதை குறித்து பார்க்கலாம்..

CJI Surya Kant
CJI Surya KantANI

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கு ஒன்றின் விசாரணையின்போது கூறிய கருத்துகளின் பின்னணியில், அமெரிக்காவில் படித்து வரும் அபிஜித் தீப்கே என்பவரால் இன்ஸ்டா பக்கத்தில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’என்ற பக்கம் தொடங்கப்பட்டது. அதில் வேடிக்கையான பதிவுகள் பதிவிடப்பட்ட நிலையில், பலரும் அதனைப் பின்தொடரத் தொடங்கினர். பின்னர், சில நாட்களிலேயே மில்லியன் கணக்கில் ஃபாலோயர்களைப் பெற்று கவனம் ஈர்த்த இந்த இயக்கம், வெறும் மீம் பக்கமாக மட்டும் இல்லாமல், வேலைவாய்ப்பின்மை, தேர்வு முறைகேடுகள், கல்வி என இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பியது. மேலும், இந்த இயக்கம் அரசியல் போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்று வந்தது. ஒருகட்டத்தில் நீட் குளறுபடி சர்ச்சைகள் மீண்டும் நாடு முழுவதும் வெடிக்க, கரப்பான் போராட்டக் களத்தில் குதித்தது. இதன் விளைவாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதவி விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, SIR விவகாரம் தொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று CJP போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தது. டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த காவல் துறையிடம் CJP அனுமதி பெறாத நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. மேலும், போராட்டம் நடத்துவதற்காக அறிவிக்கப்பட்ட நாளன்று அவ்வியக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

CJP
CJPANI

இந்த நிலையில், ஈயின் உருவத்தையே அடையாளமாக கொண்டு ’மக்கி ஜனதா கட்சி’ (Makkhi Janata Party) என்ற புதிய இயக்கம் சமூக வலைதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ஈயின் எமோஜியுடன் இயங்கும் இந்தப் பக்கம், ’தங்களை இளைஞர்களால், இளைஞர்களுக்காக இயங்கும் அரசியல் இயக்கம்’ என அறிமுகப்படுத்தியிருக்கிறது.

மேலும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பது, குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் வலியுறுத்துவது ஆகியவை தங்கள் நோக்கம் என MJP கூறுகிறது. அதேநேரத்தில், ’ஒருநாள் குடிமக்களை கரப்பான் பூச்சிகள் என்றும், மறுநாள் ஈக்கள் என்றும் அழைப்பதா’ என்ற கேள்வியையும் அது முன்வைத்துள்ளது.

Party
PartyANI

கரப்பான் கட்சியைத் தொடர்ந்து ’ஈ’ பெயரிலும் ஒரு கட்சி தொடங்கப்பட்டிருப்பது இணையதள பயனர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தாலும், அதனையும் மத்திய அரசு ஆய்வு செய்துவருகிறது.

Makkhi Janta Party is a viral online satirical political page
1993 முதல் 2026 வரை | நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த போராட்டங்கள்.. முடிவுக்கு வந்த ஜந்தர்மந்தர்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com