வேதா நிலையத்தை நினைவிடமாக்குவது சட்டச் சிக்கல்: வெற்றிவேல் எம்எல்ஏ
வேதா நிலையத்தை நினைவிடமாக்குவது சட்டச் சிக்கலை உருவாக்கும் என தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் கூறியுள்ளார்.
புதிய தலைமுறையிடம் பேசிய அவர், மேலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் டி.டி.வி.தினகரன், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததை குறிப்பிட்டார். தினகரன் கேட்டுக் கொண்டதற்கு ஏற்பத்தான் தற்போது முதலமைச்சர் பழனிசாமி விசாரணை ஆணையத்தை அறிவித்துள்ளார் என்றும் வெற்றிவேல் கூறினார்.
ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றுவது குறித்து கருத்துத் தெரிவித்த வெற்றிவேல், அந்த வீட்டைப் பற்றிப் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றார். இது குறித்து சசிகலா உள்ளிட்டோர் பேசித்தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார். சொத்து குறித்துப் பேசுவதில் பல்வேறு சட்டச் சிக்கல்கள் இருப்பதாகவும் வெற்றிவேல் எம்எல்ஏ கூறினார்.