கையசைத்தார் கருணாநிதி: தொண்டர்கள் உற்சாகம்

கையசைத்தார் கருணாநிதி: தொண்டர்கள் உற்சாகம்
கையசைத்தார் கருணாநிதி: தொண்டர்கள் உற்சாகம்

சென்னை கோபாலபுரம் வீட்டு வாயிலில் திரண்டிருந்த திமுக தொண்டர்களை பார்த்து கருணாநிதி கையசைத்தார். அதைப்பார்த்து தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார். அப்போது, முரசொலி பவளவிழா மலரை கருணாநிதி பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினார். இந்த சந்திப்பின் போது திமுக மற்றும் பாஜக தொண்டர்கள் பலர் கோபாலபுரம் இல்லம் முன்பு திரண்டிருந்தனர். சந்திப்பிற்கு பிறகு வீட்டு வாயிலுக்கு வந்தார் கருணாநிதி. அவர் அங்கு திரண்டிருந்த தொண்டர்களை பார்த்து கையை அசைத்ததோடு  மகிழ்ச்சி பொங்க புன்னகைத்தார். ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் அப்போது அருகில் இருந்தனர். 

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று திரும்பிய பின்னர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக தொண்டர்களை சந்திப்பதையும், நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தவிர்த்தார். சில நாட்களுக்கு முன்பு முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார். தற்போது  வீட்டு வாயிலில் திரண்டிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்ததையடுத்து அவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com