\
jailer 2
jailer 2instagram

வரலாறு படைத்த ரஜினி! 1000 கோடியை நெருங்கும் ஜெயிலர் 2? முதல் தமிழ் திரைப்படம் இதுவா?

தமிழ் சினிமாவில் வரலாற்று சாதனையை ஜெயிலர் 2 திரைப்படம் நடத்திக் காட்டியுள்ளது.
Published on: 

செய்தியாளர் - கார்த்திகேயன்

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் 2023-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மிகப்பெரிய சாதனையை படைத்தது. மேலும், ரஜினியின் வலிமையை புரிந்துக் கொண்டு கச்சிதமான திரைக்கதையை எழுதிய நெல்சன், பலராலும் பெரிய அளவில் பாராட்டப்பட்டார். ஆனால், இந்த திரைப்படத்தின் 2-ஆம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டபோது, பெரும்பாலான ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நல்ல திரைப்படத்தை சீக்வெல் எடுக்கிறேன் என்கிற பெயரில், கெடுத்து வைத்ததே, ரசிகர்களின் இந்த அதிர்ச்சிக்கு காரணமாக இருந்தது. இதனால் வெளியீட்டின்போது படத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், பார்ட் 2 சாபம், அனிருத் சாபம் என்று அனைத்து சாபங்களை உடைத்துத் தள்ளிய ஜெயிலர் 2, முந்தைய பாகத்தை காட்டிலும் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனால், இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் முதல் ஆயிரம் கோடியை எட்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

jailer 2
jailer 2instagram

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் முதல் வார வசூல் நிலவரம் குறித்து தெரியவந்துள்ளது. அதாவது, ஜெயிலர் 2-வின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பாக்ஸ் ஆபிஸ் பேரரசன் ரஜினிகாந்த் என்றும், ஜெயிலர் 2 திரைப்படம் முதல் வாரத்தில் மட்டும் 549 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் சினிமா வரலாற்றிலேயே இது முதல்முறை என்றும், அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தி மொழியில் குறிப்பிடத்தக்க காட்சிகள் கிடைக்கும் பட்சத்திலும், இதே வேகத்தில் வசூல் அதிகரிக்கும் பட்சத்திலும், தமிழ் சினிமாவின் முதல் ஆயிரம் கோடி ரூபாய் என்ற வரலாற்று சாதனையை ரஜினி படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

jailer 2
சட்டை கசங்காமல் 500 கோடி அடிப்பது ரஜினி சாரால் மட்டும்தான் முடியும்! அல்லு அர்ஜுன்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com