சட்டை கசங்காமல் 500 கோடி அடிப்பது ரஜினி சாரால் மட்டும்தான் முடியும்! அல்லு அர்ஜுன்
செய்தியாளர் - M. மீரா
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை நடிகர் அல்லு அர்ஜுன் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஜெயிலர் 2 திரைப்படம் ரஜினிகாந்தின் நட்சத்திர அந்தஸ்து, ஸ்டைல் மற்றும் திரை ஆளுமையை வெளிப்படுத்தும் படமாக உள்ளது. ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் வணிக ரீதியான பொழுதுபோக்குத் திரைப்படம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சட்டை கசங்காமல் 500 கோடி அடிப்பது ரஜினி சாரால் மட்டும்தான் முடியும் என்று தெலுங்கில் பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் இசையையும் பாராட்டியுள்ளார். படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள அல்லு அர்ஜுன், இயக்குநர் நெல்சனைச் சிறந்த படைப்பாளி எனப் புகழ்ந்துள்ளார்.
ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், விஜய் சேதுபதி, சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குற்றவுலகில் உருவாகும் புதிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் ஓய்வுபெற்ற ஜெயிலர் முத்துவேல் பாண்டியனின் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

