ஒலிம்பிக் : இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதியில் போராடி தோல்வி

ஒலிம்பிக் : இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதியில் போராடி தோல்வி
ஒலிம்பிக் : இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதியில் போராடி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்கில் அர்ஜென்டினா அணியுடனான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 1 - 2 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியுள்ளது. ஆட்டதின் துவக்கத்தில் 1 - 0 என லீட் எடுத்தது இந்தியா. 

இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதியில் அர்ஜென்டினா 2 - 1 என முன்னிலை பெற்றது. இறுதி பகுதியில் கோல் கணக்கை சமன் செய்ய முயன்ற இந்தியா அதில் தோல்வியை தழுவியது. 

வரும் 6-ஆம் தேதி நடைபெறுகின்ற வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி பிரிட்டனை எதிர்கொள்கிறது. கடந்த முறை பிரிட்டன் மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com