உபெர் டிரைவரின் ‘But உங்க நேர்மை பிடிச்சிருக்கு' மொமண்ட்: டெல்லி பெண்ணின் வைரல் போஸ்ட்!

உபெர் டிரைவரின் ‘But உங்க நேர்மை பிடிச்சிருக்கு' மொமண்ட்: டெல்லி பெண்ணின் வைரல் போஸ்ட்!
உபெர் டிரைவரின் ‘But உங்க நேர்மை பிடிச்சிருக்கு' மொமண்ட்: டெல்லி பெண்ணின் வைரல் போஸ்ட்!

ஓலா, உபெர், ரேப்பிடோ போன்ற பைக், ஆட்டோ, கார் டாக்சி பயன்பாடு அனைவர் மத்தியிலும் பரவலாகியிருக்கிறது. சொந்தமாக கார், பைக் இல்லாதவர்கள் பெரும்பாலும் இதுப்போன்ற ஆன்லைன் சேவைகளையே நம்பியிருக்கிறார்கள்.

ஒரு வகையில் நல்லவையாக இருந்தாலும், சமயங்களில் இதுபோன்ற சேவைகளில் நடக்கும் குடச்சல் மிகுந்த சம்பவங்கள் மக்களிடையே முகம் சுழிக்க வைக்கவும் தவறாது. அதுவும் கூகுள் மேப் படிதான் செல்வேன் என்றும், சவாரியை ஏற்பதாக;f கூறி வாடிக்கையாளரை காக்க வைத்து விட்டு கடைசி நேரத்தில் கேன்சல் செய்வது போன்றவை நித்தமும் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

ALSO READ: 

இதற்கு வாடிக்கையாளர் தரப்பில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டாலும் அந்த நிறுவனங்கள் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் தெரியாமலேயே இருக்கின்றன. இப்படி இருக்கையில், உபெர் டிரைவர் ஒருவர் வாடிக்கையாளர் பெண் ஒருவரின் சவாரியை ஏற்க மறுத்த சம்பவம் டெல்லியில் அதுவும் மழை நேரத்தில் நடந்திருக்கிறது.

அதன்படிம் ரியா கலிஸ்வால் என்ற டெல்லியை சேர்ந்த ட்விட்டர் பயனர் ஒருவர், தான் உபெரில் கேப் புக் செய்தபோது, அவருக்கு புக்கான டிரைவருடன் மேற்கொண்ட chat screenshot-ஐ பகிர்ந்திருக்கிறார்.

அந்த பெண்ணின் ட்வீட்டில், “உபெர் டிரைவரிடம் தான் இருக்கும் லொகேஷனுக்கு வருகிறீர்களா எனக் கேட்க, அதற்கு அந்த ஓட்டுநர் எனக்கு வர பிடிக்கவில்லை” என பதிலளித்திருக்கிறார். இந்த ஸ்கீரீன்ஷாட்டை பகிர்ந்த ரியா, இதனால்தான் நேற்று டெல்லியில் மழை கொட்டித் தீர்த்திருக்கிறது என கேப்ஷனும் இட்டுள்ளார்.

கடந்த ஜூலை 21ம் தேதி பகிர்ந்த ரியாவின் ட்வீட் நெட்டிசன்களிடையே வைரலாகி, பலரது ரியாக்‌ஷன்களையும் பெற்றிருக்கிறது. இதனையடுத்து, உபெர் டிரைவர் கூறியதை ஒரு டெம்ப்ளேட்டாகவே மாற்றி “திங்கள்கிழமையன்று வேலைக்கு கிளம்புங்கள் எனக் கூறும்போது எனக்கு செல்ல பிடிக்கவில்லை எனக் கூற தோன்றுகிறது” என ட்வீட்டியிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com