“இன்றைய இந்தியாவை பார்த்தால் காந்தியின் ஆன்மா காயப்படும்” - சோனியா

“இன்றைய இந்தியாவை பார்த்தால் காந்தியின் ஆன்மா காயப்படும்” - சோனியா
“இன்றைய இந்தியாவை பார்த்தால் காந்தியின் ஆன்மா காயப்படும்” - சோனியா

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் நடப்பதை பார்த்திருந்தால், மகாத்மா காந்தியின் ஆன்மா காயப்பட்டிருக்கும் என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுள்ளார். 

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சோனியா காந்தி, “காந்தியின் கொள்கையும், இந்தியாவும்தான் ஒன்றுக்கொன்று பிரித்தரிய முடியாதது. ஆனால், சிலர் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம்தான் இந்தியாவின் அடையாளமாக இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள். காந்தியின் கொள்கைகள் இந்தியாவுக்கு அடித்தளமாக உள்ளது. 

ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் காந்தியின் கொள்கைகள் பெரிய அளவில் சிதைந்துள்ளது. காந்தியின் வார்த்தைகளை கூறுவது எளிது. அதன்படி நடப்பதுதான் கடினம். சிலர் அவருடைய கருத்துகளை தவறாக பயன்படுத்துகிறார்கள். 

பொய்யான அரசியல் செய்பவர்களால் காந்தியின் அகிம்சை கொள்கையை புரிந்து கொள்ள முடியாது. அப்படியானவர்கள் எப்படி காந்தியின் தியாகத்திற்கு உரிமை கோரமுடியும். மற்றவர்கள் என்ன கூறிக்கொள்கிறார்கள் என்பது நமக்கு தேவையில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி காந்தியின் பாதையை பின்பற்றுகிறது. வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் விவசாயிகளுக்கு தேவையான வசதிகள் ஆகியவற்றை நிறைவேற்றியுள்ளது” என்றார் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com