முதல்வரை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்

முதல்வரை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்
முதல்வரை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசின் போக்குவரத்து கழகங்களை சீர்செய்வது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் , முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்தார்.

தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல், போக்குவரத்து கழகங்களை சீர்செய்வது தொடர்பான திமுகவின் ஆய்வறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஸ்டாலின் வழங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழு தயாரித்த திமுகவின் ஆய்வறிக்கையில் 27 பரிந்துரைகள் இடம் பெற்றிருந்தன. முதலமைச்சர் உடனான சந்திப்பின்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

திமுக அளித்துள்ள ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளை அமல்படுத்தினால், போக்குவரத்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை அரசுக்கு இருக்காது என முதலமைச்சருடனான சந்திப்புக்குப் பிறகு ஸ்டாலின் கூறினார். தமிழக அரசு இனியும் அலட்சியம் செய்தால், மீண்டும் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். தமிழக முதலமைச்சரை அவரது அறையில் மு.க.ஸ்டாலின் சந்திப்பது இதுவே முதல் முறை. இந்தச் சந்திப்பின்போது தமிழக அரசின் சார்பில் எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com