CSK vs KKR: டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு!

CSK vs KKR: டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு!
CSK vs KKR: டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு!

15-வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். அதனால் இந்த போட்டியில் சென்னை அணி முதலில் பேட் செய்கிறது. 

இரு அணிகளும் ஐபிஎல் களத்தில் நேருக்கு நேராக 25 முறை மோதி உள்ளன. அதில் சென்னை 17 போட்டிகளிலும், கொல்கத்தா 8 போட்டிகளிலும் வென்றுள்ளது. கடந்த சீசனில் சென்னை அணி வான்கடேவில் விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆனால், கொல்கத்தா அணி இந்த மைதானத்தில் மொத்தம் 11 ஆட்டங்களில் விளையாடி, வெறும் 1 வெற்றியை தான் பெற்றுள்ளது. 

ஆடும் லெவன் விவரம்! 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

வெங்கடேஷ் ஐயர், ரஹானே, ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ரஸ்ஸல், சுனில் நரைன், ஷெல்டன் ஜாக்சன், உமேஷ் யாதவ், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி. 

சென்னை சூப்பர் கிங்ஸ்!

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஷிவம் தூபே, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), டுவைன் பிராவோ, மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, துஷார் தேஷ்பாண்டே. 

Photo : Hotstar

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com