
ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு மீது 2 பிரிவுகளின்கீழ் கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கோடம்பாக்கத்தில் வழிபாட்டுத்தலங்கள் முன்பாக பரப்புரை செய்ய காவல்துறையினர் அனுமதி தராத நிலையில், குஷ்பு அங்கு பரப்புரை மேற்கொண்டதால் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறி செயல்படுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் குஷ்பு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.