பிக்பாஸ் சீசன் 7-ல் தமிழ் இலக்கியவாதி, மலேசியா மாடல்... ஆரம்பிக்கலாமா?

பிக்பாஸ் சீசன் 7-ல் இந்திரஜா, விஷ்ணு ,சத்யா, அனன்யா ராவ், மூன் நிலா , கூல் சுரேஷ் , சரவணன், எழுத்தாளர் பவா செல்லத்துரை, அக்‌ஷயா உதயகுமார் ஆகியோர் பங்குபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 7
பிக்பாஸ் சீசன் 7Twitter

பிக்பாஸ் சீசன் 7.... இன்னும் ஒரு நாள் இருக்கும் நிலையில், ரசிகர்களின் மனதில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்துகொள்ளும்நிலையில், அவர்கள் யாராக இருக்கும்? இவர்கள் தானா அது? என்ற சஸ்பென்ஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் பற்றி நாம் முன்னரே கணித்து செய்தி வெளியிட்டிருந்தாலும், இதில் நடிகர் அப்பாஸ் கலந்துகொள்ளவில்லை என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 7
இன்னும் இரண்டே நாட்கள்தான்.. பிக்பாஸ் countdown starts! இந்த சீசனில் இவங்கெல்லாம் கூட இருக்காங்களா?

கூடுதல் தகவலாக, இந்நிகழ்சியில் இந்திரஜா, விஷ்ணு , சத்யா, அனன்யா ராவ், மூன் நிலா , கூல் சுரேஷ் , சரவணன், எழுத்தாளர் பவா செல்லத்துரை, அக்‌ஷயா உதயகுமார் ஆகியோர் பங்குபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதில் பவா செல்லத்துரை தமிழ் சிறுகதை எழுத்தாளர், மொழிப்பெயர்ப்பாளார், பேச்சாளார், மற்றும் பதிப்பாசிரியர் என்று பன்முகத்திறமை கொண்டவர். முதன்முறையாக ஒரு இலக்கியவாதி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வது இதுவே முதன்முறை.

பவா செல்லத்துரை
பவா செல்லத்துரை

அதேபோல், வெளிநாட்டு வாழ் தமிழர் ஒருவரும், நடிகையுமான, மூன் நிலா என்பவர் இந்த சீசனில் இடம் பெற்றுள்ளார். இவர் மலேசியாவை சேர்ந்தவர். ஒரு நாடகத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்ற புத்தகத்தில் இவர் பெயர் இடம்பெற்றுள்ளது. இவர் ஒரு செவிலியர் என்பது கூடுதல் தகவல். இவர் இறைவி, திருமகள் காடு என்ற திரில்லர் தொடரில் நடித்தவர்.

மூன் நிலா
மூன் நிலா

இதற்கிடையே ப்ரோமோ வீடியோ ஒன்றை Insta-வில் வெளியிட்டுள்ளது பிக்பாஸ். அதில் நான் யார் (guess who? ) என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்பதுபோல மிரட்டும் பெண் நிழல் உருவம் நமது வைஃபை அதிகரிக்க வைத்திருக்கிறது. இதனை பார்த்த பலரும் இது சனம் என்றும், ரோஷினி என்றும் தங்களின் அனுமானத்தை தெரிவித்து வந்தாலும் ஏனோ நம் கண்ணுக்கு அது மூன்நிலாவைப்போல் தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

இவர்களைப்போன்று பலரும் இந்நிகழ்சியில் பங்குப்பெற்றிருந்தாலும், இன்னும் இறுதியான போட்டியாளர் யார் என்பதும் நம் கணிப்பு சரிதானா? என்பதையும் தெரிந்துக்கொள்ள இன்னும் ஒருநாள் நாம் காத்திருக்கவேண்டும்.

காத்திருப்போம். நாளை வரை.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com