இன்னும் இரண்டே நாட்கள்தான்.. பிக்பாஸ் countdown starts! இந்த சீசனில் இவங்கெல்லாம் கூட இருக்காங்களா?

இதில் பெண்கள் ஒருவீட்டிலும், ஆண்கள் ஒரு வீட்டிலும் பிரித்துவிடப்படுவார்களா? அல்லது, அகர வரிசைப்படி இந்த வீட்டில் பாதி பேரும் மற்றொரு வீட்டில் பாதி பேரும் இருப்பார்களா? அல்லது, டாஸ்கில் வெற்றி பெற்றவர்கள் மற்றொரு வீட்டிற்குள் செல்வார்களா?
பிக்பாஸ் சீசன் 7
பிக்பாஸ் சீசன் 7PT

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழகத்தில் தனியார் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகமானது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், இன்னும் இரு தினங்களில் (அக்.1) 7ஆவது சீசன் ஆரம்பிக்கவுள்ளது. இதுவரை முடிந்துள்ள 6 சீசன்களில் முதல் சீசனில் நடிகர் ஆரவ் டைட்டில் வென்று இருந்தார். அதேபோல் 2வது சீசனில் ரித்விகாவும், 3வது சீசனில் முகென் ராவும், 4வது சீசனில் ஆரியும், 5வது சீசனில் ராஜுவும் டைட்டில் வின்னர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த ஆண்டு நடந்துமுடிந்த 6வது சீசனில் அசீம் டைட்டில் வின்னர் ஆனார். இந்நிலையில், அக்டோபர் ஒன்றாம் தேதி பிக்பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கு கமல்ஹாசனுக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளத்தை கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இன்னும் இரண்டு நாள் தான்..

இரண்டே நாள் தான் பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பிக்க.. இந்த முறை இரண்டு வீடுகள் என்று நடிகர் கமல்ஹாசன் ப்ரோமோவில் சொல்லியிருந்தாலும், இதில் யார் யாருக்கு எந்த எந்த வீடு என்பது சஸ்பென்ஸாகவே இருக்கிறது.

Bigg Boss 7
Bigg Boss 7twitter

இதில் பெண்கள் ஒருவீட்டிலும், ஆண்கள் ஒரு வீட்டிலும் பிரித்துவிடப்படுவார்களா? அல்லது, அகர வரிசைப்படி இந்த வீட்டில் பாதி பேரும் மற்றொரு வீட்டில் பாதி பேரும் இருப்பார்களா? அல்லது, டாஸ்கில் வெற்றி பெற்றவர்கள் மற்றொரு வீட்டிற்குள் செல்வார்களா?.. இப்படி பல யூகங்கள் நமக்குள் எழுகின்றன.

‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்று கமல் சொன்னதுக்கேற்ப, நம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார். இதில் கலந்துக்கொள்ளும் போட்டியாளர்களை பற்றி நாம் ஏற்கனவே தெரித்திருந்தோம், இதைத் தவிர இன்னும் சிலர் இப்போட்டியில் கலந்துக்கொள்ள இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7PT

அதன் படி மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா, ஜோவிகா, தர்ஷா, குப்தா, குமரன்.. போன்றவர்களுடன், ‘தலைவா’ படத்தில் நடிகர் விஜயுடன் நடித்த விஜய்வர்மா என்ற நடிகரும் இதில் கலந்துக்கொள்ள இருப்பதாக தெரிகிறது.

பிக்பாஸ் சீசன் 7
'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' அக்.1 முதல் ஆரம்பமாகும் பிக்பாஸ் சீசன்7! போட்டியாளர்களில் சிலர் இதோ!

முந்தைய சீசனில் கலந்துக்கொண்டு தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தைக்கொண்டிருந்த தாமரையை யாரும் மறந்திருக்க முடியாது, இவரின் கணவர் பார்த்தசாரதி இம்முறை இந்த சீசனில் கலந்துக்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பொறுத்திருந்து பார்க்கலாம், இந்த முறை யார் முதலில் வெளியேருகிறார்கள், யார் கோப்பையை தட்டிச்செல்வார்கள் என்று.. வார இறுதி என்று வரும், எந்த குறும்படத்தை போடுவார், யாரை பாராட்டுவார் யாரை வெளியேற்றுவார் என்ற எதிர்பார்ப்புடன் ஒவ்வொருவரும் காத்திருக்கின்றோம். பார்க்கலாம்... இந்தமுறை என்னென்ன ட்விஸ்ட் எல்லாம் வருகிறதென்று.... காத்திருப்போம்.

இன்னும் இரண்டு நாள் தான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com