\
baby with mustache - AI video went viral on socail media
baby with mustacheX

மீசையுடன் பிறந்த குழந்தை? நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சி! இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்!

மீசையுடன் குழந்தை பிறந்திருப்பது போன்ற ஏ.ஐ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.
Published on: 

செய்தியாளர் - கார்த்திகேயன்

பொதுவாக, பிறந்த சில நிமிடங்களிலேயே குழந்தை பேசிவிட்டால், பிறந்த உடனேயே குழந்தை நடந்துவிட்டால், உலகம் அழிவை நோக்கி செல்லும் என்று பல்வேறு நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் உள்ளது. வழக்கத்திற்கு மாறான சம்பவங்களாக இது இருப்பதால், மக்கள் இவ்வாறு யோசிக்கிறார்கள். இதனால், இதுமாதிரியான நிகழ்வுகள் ஏதாவது நடந்துவிட்டதாக கூறும் வீடியோவை பார்த்தாலே, உலகத்தின் கடைசி கட்டம் நெருங்கிக் கொண்டிருப்பதாக, அச்சம் அடைய ஆரம்பித்துவிடுகிறார்கள். இப்படியான சூழ்நிலையில், குழந்தை ஒன்று மீசையுடன் பிறந்திருப்பது மாதிரியான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

baby with mustache
baby with mustacheX

அதாவது, தெற்கு அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் நாட்டில், மீசையுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தை உலகத்தையே ஆளும் மிக சக்தி வாய்ந்த குழந்தை என்றெல்லாம் பரப்பி வருகிறார்கள். வீடியோவை பார்த்த ஒருசில நெட்டிசன்கள், இது உலக அழிவின் ஆரம்பம் என்று வழக்கம் போல, கமெண்டுகளை அள்ளி வீச ஆரம்பித்தனர். ஆனால், உண்மையில் இது ஒரு ஏ.ஐ வீடியோ தான். வெறும் 15 நொடிகள் மட்டும் ரன்னிங் டைம் கொண்ட இந்த வீடியோவில், குழந்தை முகம், கண்கள், முகத்தில் உள்ள வியர்வை துளிகள் ஆகியவற்றை வைத்தே, இது ஏ.ஐ வீடியோ தான் என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது.

இதேபோல், பிறவியிலேயே பார்வை இல்லாத குழந்தை ஒன்று, அறுவை சிகிச்சைக்கு பிறகு, தனது தாயை பார்த்தவுடன் கண்டறிவது, பிறந்த குழந்தை ஒன்று தனது காலின் மேல் காலை போட்டுக் கொண்டு படுத்திருப்பது மாதிரியான பல்வேறு வீடியோக்கள், உண்மையா அல்லது ஏ.ஐ வீடியோவா என்பது புரியாமல், குழம்பி வரும் நிலையில், தற்போது இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இதுமாதிரியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் கண்டால், அதனை பகிராமல் இருக்கவும். சில சமயங்களில், போலி வீடியோக்களை உண்மை என்று நம்பி, சிலர் பணத்தை இழக்கும் அபாயங்கள் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று, உஷாரான நெட்டிசன்கள் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

baby with mustache - AI video went viral on socail media
இஸ்லாத்திற்கு எதிரி? எப்ஸ்டீன் கோப்புகளை கையிலெடுத்த ஹவுதி.. சவுதிக்கு எதிரான புதிய திட்டம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com