காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன: மத்திய அமைச்சர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன: மத்திய அமைச்சர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன: மத்திய அமைச்சர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன என்று மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் கூறியுள்ளார். 

சமீபத்தில் தமிழகம் வந்திருந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, “உச்சநீதிமன்றம் அளித்துள்ள காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது எளிதானது அல்ல. இது கடினமன செயலாகும்” என்று கூறியிருந்தார். நிதின் கட்காரியின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றுமா அல்லது கர்நாடக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தள்ளிப்போடுமா என்று பலரும் ஐயம் எழுப்பி இருந்தனர். நிதின் கட்காரியின் கருத்து மேலும் குழப்பமான நிலையை ஏற்படுத்தியது.

இத்தகைய நிலையில், காவிரி மேலாண்மை அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன என்று மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் கூறியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்த அவர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை தெரிவித்தார். மேலும், தீர்ப்பின்படி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com