#அமித்ஷா_உளறல்கள் - நெட்டிசன்கள் தெறிக்கவிடும் கலக்கல் மீம்ஸ்

#அமித்ஷா_உளறல்கள் - நெட்டிசன்கள் தெறிக்கவிடும் கலக்கல் மீம்ஸ்
#அமித்ஷா_உளறல்கள் - நெட்டிசன்கள் தெறிக்கவிடும் கலக்கல் மீம்ஸ்

#அமித்ஷா_உளறல்கள் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

பாரதிய ஜனதா கட்சியின் கர்நாடகா மாநில முதலமைச்சர் வேட்பாளரான எடியூரப்பாவை மிகப் பெரிய ஊழல்வாதி என அக்கட்சியின் தலைவர் அமித் ஷாவே வாய் தவறி கூறிய காட்சி சமூக ஊடகங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. கர்நாடக மாநிலம் தாவான் கிரியில் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த அமித் ஷா, சமீபத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் மிகவும் ஊழல் மலிந்த அரசுக்கான போட்டி வைத்தால் எடியூரப்பா அரசுதான் முதலிடத்தில் இருக்கும் என தெரிவித்ததாக குறிப்பிட்டார். அமித் ஷா இதை கூறும்போது எடியூரப்பா அவர் அருகிலேயே அமர்ந்திருந்தார். மற்றொரு தலைவர் அவர் காதுகளில் கிசுகிசுத்தவுடன் அமித் ஷா தன்னை திருத்திக்கொண்டார். 

எனினும் எடியூரப்பாவுக்கு எதிராக அமித் ஷா பேசிய வீடியோவை காங்கிரஸ் தலைவர்கள் வைரலாக பரப்ப தவறவில்லை. கர்நாடகா மாநில தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியின் பரப்புரைக்கு மிகச் சிறந்த தொடக்கமாக அமைந்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதைப் போன்றே காங்கிரஸ் கட்சியின் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த திவ்யா ஸ்பன்தனா அமித் ஷாவால் உண்மைகூட பேசமுடியும் என்பதை யார் அறிந்திருந்தார்? என கிண்டலாக பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பும் அமித் ஷா எடியூரப்பாவை பற்றி தவறாக பேசியிருப்பதாக கூறியுள்ள அவர், தேதி இல்லாத விடீயோ ஒன்றையும் பதிவிட்டு, பாரதிய ஜனதாவில் ஏதோ குழப்பம் இருப்பதாகவும் தெரிவித்தார். 

இதனிடையே, #அமித்ஷா_உளறல்கள் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதில், நெட்டிசன்கள் வழக்கம் போல் வடிவேல் படங்களை வைத்து மீம்ஸ்களை தெறிக்கவிடுகிறார்கள். #அமித்ஷா_பழமொழிகள் என்ற ஹேஷ்டேக்கிலும் பலரும் அமித்ஷா பேச்சை வறுத்தெடுத்து வருகிறார்கள். ஏற்கனவே இதுபோன்ற உளறல்களுக்கு சமீபத்தில் பெயர் போனவர் ஸ்டாலின். அமித்ஷாவை ஸ்டாலினுடன் ஒப்பிட்டும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com