youtubeweb
டெக்
அதிகரித்துவரும் போலி தகவல்கொண்ட வீடியோக்கள்.. யூ-டியூப் சேனல்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!
இந்தியாவில் யூ-டியூப் சேனல்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
உண்மை தன்மை கொண்ட செய்திகளை காட்டிலும் போலியான, தவறான தகவல்களை கொண்ட யூ-டியூப் வீடியோக்கள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவதால், அதற்கு கட்டுப்பாடுகள் அவசியம் என கோரிக்கைகள் எழுந்து வந்தன.
போலியான தகவல் இருந்தால் நீக்கப்படும்..
தவறான செய்திக் கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை யூ-டியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, தவறான தகவல் கொண்ட தலைப்புகள், புகைப்படங்கள் கொண்ட வீடியோக்கள் உடனடியாக நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இதுபோன்ற வீடியோக்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் போது, அதனை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்புகள் வழங்கப்படுமெனவும் யூ-டியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.